Friday, 23 June 2023

Academics of Athens

                           


 Academics of Athens 


அரிஸ்டாட்டில் கிரேக்க நாட்டில் கி.மு.384 ஆம் ஆண்டு பிறந்தார் . அரிஸ்டாட்டிலின்  தந்தை கிரேக்க நாட்டில்  மன்னர் மாளிகையில் மருத்துவராகப் பணி புரிந்து வந்தார். அரிஸ்டாட்டில் தன் இளமைக் கல்வியைத் தந்தையிடமே பெற்றார்; தனது 17 ஆம் வயதில் ஏதென்ஸ் நகரக் கல்விக் கழகத்தில் (Academics of Athens) சேர்ந்தார். இங்குதான் கிரேக்கத்தில் அப்போது புகழ் வாய்ந்த தத்துவ அறிஞராக விளங்கிய பிளேட்டோவின் மாணவராகும் வாய்ப்பு அரிஸ்டாட்டிலுக்குக் கிடைத்தது. 


ஆசிரியர் பிளேட்டோவும், மாணவர் அரிஸ்டாட்டிலும் ஒருவர் கருத்தை ஒருவர் பாராட்டிப் போற்றியதும் உண்டு; கருத்து வேறுபாடு தோன்றியபோது நாகரிகத்தோடு மறுத்ததும் உண்டு. ஏதென்ஸ் கல்விக் கழகத்தில் கணிதம், தத்துவம், அண்ட அறிவியல் (Cosmic Science), அரசியல் ஆகிய துறைகளை அரிஸ்டாட்டில் ஆர்வத்துடன் கற்றார். பிளேட்டோவின் மறைவிற்குப் பின்னர் அரிஸ்டாட்டில் அங்கு ஆசிரியாகும் வாய்ப்பைப் பெற்றார். மிக விரைவில் தனது அறிவுக்கூர்மையை வெளிப்படுத்திச் சிறந்த ஆசிரியர் என்ற புகழை ஈட்டினார். அப்போது ஆட்சியிலிருந்த மன்னர் பிலிப் தனது மகன் அலெக்ஸாண்டருக்குக் கல்வி கற்பிக்குமாறு அரிஸ்டாட்டிலைக் கேட்டுக்கொண்டார். 


அரிஸ்டாட்டிலிடம் கல்வி கற்ற இம்மாணவன்தான் பின்னாளில் உலகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் கொண்டுவர விரும்பிய மாமன்னன் அலெக்ஸாண்டராக விளங்கினான். தனது ஆசிரியர் அரிஸ்டாட்டிலிடம் அலெக்ஸாண்டர் அளவற்ற அன்பும், மதிப்பும் கொண்டிருந்தான்; ஆசிரியரின் அறிவியல் ஆய்வுப் பணிகள் அனைத்திற்கும் வேண்டிய பொருளுதவி புரிந்து ஒத்துழைப்பு நல்கினான். இயற்கை ஆய்விலும், விலங்குகள் பற்றிய ஆய்விலும் பெரும் நாட்டம் கொண்டிருந்த அரிஸ்டாட்டிலுக்கு மன்னனின் ஆதரவு பேருதவியாக இருந்தது.


1. பொதுவாக விலங்குகளுக்கும் ஆன்மா என்பது உண்டு. ஒவ்வொரு விலங்கினமும் அதற்கே உரிய உடற்கட்டமைப்பைக் குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் பெற்றுள்ளது.

2. வாழ்க்கை வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் உட்பட்டது; எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பது. ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடையும் பொருட்டு இந்த வளர்ச்சி, மாற்றம், இயக்கம் ஆகியன அமைகின்றன.

வாழ்க்கையின் படிநிலைகள், உயர்வு தாழ்வுகள், ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றிற்கு அரிஸ்டாட்டில் முக்கியத்துவம் அளித்தார். இயற்கைப் பண்புகள், வாழ்க்கை முறைகள், செயல் முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உயிரினங்களை அரிஸ்டாட்டில் வகைப்படுத்தினார். 


அரிஸ்டாட்டில் தன் முழு வாழ்வையும் கல்விப் பணிக்கும், ஆய்வுப்பணிக்கும் அர்ப்பணித்துக் கொண்டவர். மிகச் சிறந்த ஆசிரியராகப் பணியாற்றியவர். 

வகைப்பாட்டியலின் வரலாறு:

 

வகைப்பாட்டியலின் வரலாறு:


·                 அரிஸ்டாடில் உயிரினங்களை தாவரங்கள்,விலங்குக்ள் என இரண்டு வகைகளாகப் பிரித்தார்

·                 மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்ப்டும் ஹிப்போகிரேட்ஸ் மருத்துவ அடிப்படையில் 

               உயிரினங்களை வகைப்படுத்தினார்

·                  சிற்றினம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் – ஜான்ரே

·                  கரோலஸ் லின்னேயஸ் இருசொல் பெயரிடும்முறையை அறிமுகப்படுத்தினார். இவரே "வகைப்பாட்டியலின் தந்தைஎன அழைக்கப்படுகிறார்

·                  முதல் சொல் குறிப்பிட்ட உயிரினத்தின் பேரினத்தையும், இரண்டாம் சொல் குறிப்பிட்ட உயிரினத்தின் இனத்தையும் குறிக்கின்றன.

 

இருசொற்பெயர்கள் .கா

கரப்பான் பூச்சி  பெரிப்பிளானேட்டா அமெரிக்கானா

வீட்டு   மஸ்கா டொமஸ்டிகா

தவளை  ராணா ஹெக்ஸாடாக்டைலா

புறா கொலம்பியா லிவியா

மனிதன்  ஹோமோ செப்பியன்ஸ்

  

தக்காளி  லைக்கோபெர்சிகான்  எஸ்குலண்டம்

மா  மாஞ்சிஃபெரா இண்டிகா

அரிசி  ஒரைசா சட்டைவா

 

ஐந்துலக வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் R.H.விட்டேக்கர்

 

 


 

 


Monday, 19 June 2023

6ஆம் வகுப்பு



6 ஆம் வகுப்பு 

 வரலாறு


வரலாறு என்றால் என்ன?

மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

சிந்து சமவெளி நாகரிகம்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் : சங்க காலம்

இந்தியா – மெளரியருக்குப் பிறகு

பேரரசுகளின் காலம் : குப்தர் வர்த்தனர்

தென்னிந்திய அரசுகள்


புவியியல்


பேரண்டம் மற்றும் சூரியக் குடும்பம்

நிலப்பரப்பும் பெருங்கடல்களும்

வளங்கள்

ஆசியா மற்றும் ஐரோப்பா

புவி மாதிரி

பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்


குடிமையில்


பன்முகத்தன்மையினை அறிவோம்

சமத்துவம் பெறுதல்

தேசியச் சின்னங்கள்

இந்திய அரசியலமைப்பு சட்டம்

மக்களாட்சி

உள்ளாட்சி அமைப்பு ஊரகமும் நகர்ப்புறமும்

சாலை பாதுகாப்பு



பொருளில்


பொருளியல் – ஓர் அறிமுகம்

Friday, 16 June 2023

ஒரு புத்தகம் / ஒரு ஆசிரியர் / ஒற்றை வரி வாழ்க்கையே புரட்டி போடும்???

 ஒரு புத்தகம் / ஒரு ஆசிரியர் / ஒற்றை வரி வாழ்க்கையே புரட்டி போடும்???


3  வயதுவரை  ஐன்ஸ்டீன்  பேச்சாற்றல்  இல்லாத  குழந்தையாக  இருந்தார்.  அவர்  பள்ளியில்  எடுத்த  அதிகப்படியான  மதிப்பெண்  நூற்றுக்கு  50 தான்.  சிறு  வயது  முதல்  இசை  கேட்டு  ரசிப்பதும்,  வயலின்  இசைப்பதும்  ஐன்ஸ்டீனுக்கு  பிடித்தமான  விஷயங்கள். 

 ஒரு  நாள் பள்ளியில் அவரது ஆசிரியர்  ஐன்ஸ்டீனிட்ம்  குழந்தைகளுக்கான  அறிவியல்  புத்தகம்  ஒன்றைத்  தந்தார்.  அதில் "மின்சாரக்  கம்பத்துக்குள்  மின்சாரம்  பாயும்  வழி  எங்கும்  நாமும்  ஓடினால்  எப்படி  இருக்கும்?"  என  எழுதியிருந்தது.  

அதைப்  படித்தவுடன்  ஐன்ஸ்டீனின்  அறிவியல்  கற்பனைகள்  விரியத்  தொடங்கின.  "ஒலி  என்பது  அலையாக  இருந்தால்  அது  உறைந்த  நிலையில்தான்  காட்சி  அளிக்கும்.  ஆனால்  ஒளி  பாய்கிறதே.  இது  அணு  பற்றிய  கருத்தியலுக்குப்  புறம்பானதே."  என  மனதில்  ஒளியின்  ஓட்டத்தைக்  காண  தொடங்கினார்.  அன்று  தோன்றியக்  காட்சியை  10  வருடங்களாக  அசைபோட்டதின்  விளைவாகவே  சிறப்புச்  சார்புக்  கோட்பாடு  E=MC2  என்ற  கூற்று  1905ல்  இயற்பியல்  வரலாற்றில்  புரட்சியை  ஏற்படுத்தியது.  



     

Monday, 12 June 2023

கர்ணன் ஏன் மாவீரன்...


 கர்ணன் ஏன் மாவீரன்...


அஸ்த்தினாபுரத்து தேரோட்டியான அதிரதன் மற்றும் ராதையினால் வளர்க்கப்பட்டவன் கர்ணன். பிறப்பால் சத்ரியன். கர்ணனுக்கு வில்வித்தை கற்று தர துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை  போகிறான் கர்ணன்.  

மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச்  சொல்கிறார் குரு கிருபாச்சாரியார்.. 

அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய்விட்டான். 

இப்போது கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டினான் அந்த  கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான். மிகச் சிறந்த வில்வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு ஆச்சரியம் .ஏன் கர்ணா என்று  காரணம் கேட்கிறார். குருவே இது  மிகவும் அதிகாலை நேரம். இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள். இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன். ஆனால் அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும். எனவே நான் கொல்ல மாட்டேன் என்றானாம். கலங்கிப்போன குரு சொன்னாராம், "கர்ணா நீ கற்றது வித்தை அல்ல வேதம்" என்று....   

Thursday, 8 June 2023

தாய்

 தாய்


இன்று சோவியத் ரஷ்யாவில் பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ள தாய் நாவலை எழுதிய கார்கி பள்ளிக்கூடமே சென்றதில்லை மார்க்ஸிம் கார்கியின் வாழ்க்கை வேதனைகளாலும் சோதனைகளாலும் நிரம்பியது.. 3 வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாத்தாவின் கொடுமை தாங்காமல் பத்து வயதில் வீட்டை விட்டு வெளியேறினார்.


 ஒரு ஜான் வயிற்றை நிரப்ப அவர் அனுபவித்த துன்பங்களை கூற வார்த்தைகள் இல்லை

செருப்பு தைப்பது, மூட்டைத்தூக்குவது, மண்பாண்டம் செய்வது, வேட்டையாடுவது, ரயில்பாதை காவலன், மீன்பிடித்தொழில் செய்வது, இடுகாட்டுக்காவலன், பிணம் சுமத்தல், நாடக நடிகன், பழ வியாபாரி என அத்தனை வேலைகளையும் செய்தவர் மார்க்ஸிம் கார்க்கி. 

தெருத்தெருவாக அலைந்தார். குடிகாரர்கள், சமூக விரோதிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரோடும் பழகினார். சோவியத் ரஷ்யா முழுவதும் நடந்தே சென்றார். இதில் கிடைத்த அனுபவங்களைத் தான் பின்னால் எழுத்தாய் வடித்தார். 

வாழ்க்கையின் வறுமையான பக்கங்களை தானே அனுபவித்ததால் தான் அவரால் உலகச் சிறப்புமிக்க உன்னத காவியத்தை படைக்க முடிந்தது..

வாய்ப்பு கிடைத்தால் கார்கியின் தாய் நாவலை வாசித்து பாருங்கள்...

இன்றைய வறுமை தான் நம்மை நாளைய வளமைக்கு அழைத்து செல்லும்...நன்றி 


அடுத்த பதிவில் சந்திக்கிறேன்....






“உன்னையே நீ அறிவாய்”


 “உன்னையே நீ அறிவாய்” 

ஒரு சாதாரண குடும்பத்தில் தான் பிறந்தார்  சாக்ரடீஸ் ஏழ்மையில்தான் வளர்ந்தார் வறுமையில்தான் வாழ்ந்தார். இளவயதில் ராணுவ வீரராக இருந்து ஏதென்ஸுக்காக பல போர்களில் பங்கெடுத்தார். சாக்ரடீஸ் வாழ்க்கையைப்பற்றி அதிகமாக சிந்தித்தார், எதையுமே வித்தியாசமாகவும் சிந்தித்தார் அவரது சிந்தனைகள் அந்த காலகட்டத்தில் உண்மை என நம்பப்பட்டவைகளின் அஸ்திவாரங்களையே ஆட்டம் காணச்செய்தது. வாழ்வின் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்ற அதீத தாகம் சாக்ரடீஸுக்கு இருந்தது. தான் அறிந்த உண்மைகளை மக்களுக்கு சொல்ல அவர் கையாண்ட உத்தியே  அற்புதமானது.

பகல்பொழுதில் கையில் விளக்கேத்திக்கொண்டு கூட்டமுள்ள இடத்தில் எதையோ குனிந்து தேடுவதுபோல் நடிப்பார். வேடிக்கை பார்க்க அங்கு கூட்டம் கூடும். என்ன தேடுகிறீர்கள் என்று எவராவது கேட்கும்போது மனிதர்களைத் தேடுகிறேன் என்று பதில் கூறுவார். மக்கள் புரியாது விழிக்கும்போது அவர்களிடம் விளக்கிப்பேசி தன் கருத்துக்களை அவர்களது மனங்களில் விதைப்பார் சாக்ரடீஸ் . 

“உன்னையே நீ அறிவாய்” என்பது சாக்ரடீஸின் புகழ்பெற்ற வாசகம். எதையும் அப்படியே நம்பிவிடாதே ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேள் என்ற சிந்தனையை நமக்கெல்லாம் தூண்டியவர் சாக்ரடீஸ்  தான்..

நம் முன்னோர்கள் பின்பற்றினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நாமும் எல்லாவற்றையும் அப்படியே பின்பற்றலாமா? நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் அவர்களின் வாரிசுகளே பல தலைமுறையாக மக்களாட்சி என்ற பெயரில் முடியாட்சி நடத்துகின்றனர் இது சரியா ? நாமும்  ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்வி கேட்டால் சாக்ரடீஸைப் போல நமக்கும் தெளிவு பிறக்கும். தெளிவு பிறந்துவிட்டால் இந்த வையகமே நம் வசப்படும்.

Wednesday, 7 June 2023

கல்வியை விட பெரிய ஆயுதம்???


 கல்வியை விட பெரிய ஆயுதம்???


கல்வியை விட பெரிய ஆயுதம் இந்த உலகில் கண்டறியப்படவில்லை மற்றவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, அனைத்து மக்களுக்கும் கூட இதன் முக்கியத்துவம் என்ன என்பது தெரியும். ஆனாலும் படிப்பது இல்லை இந்த மூதுரை பாடல் வரிகளை படித்து பாருங்கள்..


"மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்

மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னற்குத்

தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்

சென்றவிட மெல்லாம் சிறப்பு. 


இந்த பாடலின் பொருள்


மன்னனையும் மாசு போகக் கற்றவனையும் சீர்தூக்கிப் பார்த்தால் மன்னனைக் காட்டிலும் கற்றவன் சிற்றப்புடையவன். எப்படி என்றால், மன்னனுக்கு அவனது ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் மட்டுமே சிறப்பு. கற்றவனுக்கோ அவன் சென்ற இடத்திலெல்லாம் சிறப்பு.." என்றார் ஔவையார் இதை விட சிறப்பாக கல்வியின் மேன்மையை யாராலும் விளக்க முடியாது.

Tuesday, 6 June 2023

எப்படி படிக்க வேண்டும்???

 எப்படி படிக்க வேண்டும்???


'படி' என்று சொன்னாலே நாம் நினைப்பது மனப்பாடம் செய்து படிக்க வேண்டும் என்றுதான் ஆனால் பாரதிதாசன் அவர்கள் எப்படி படிக்க வேண்டும் என்பதை கூறியுள்ளார் . பொருள் சேர்க்கும் நோக்கில் கல்வியைத் தொலைத்துவிட்ட நம் சமுதாயத்தில் படித்தலை வெறும் வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது...


நூலைப் படி - சங்கத்தமிழ்

நூலைப்படி - முறைப்படி

நூலைப்படி

காலையில் படி - கடும்பகல் படி

மாலை இரவு பொருள்படும்படி 

கற்பவை கற்கும்படி

வள்ளுவர் சொன்னபடி

கற்கத்தான் வேண்டும்படி

கல்லாதவர் வாழ்வதெப்படி ? 

பொய்யிலே முக்காற்படி

புரட்டிலே காற்படி

வையகமே ஏமாறும்படி

வைத்துள நூல்களை ஒப்புவதெப்படி ? 

தொடங்கையில் வருந்தும்படி

இருப்பினும் ஊன்றிப்படி

அடங்கா இன்பம் மறுபடி

ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி 

பாரத தாய் ஏழையா???

பாரத தாய் ஏழையா???  

இந்தியா முழுவதும் சுதந்திரப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில்  பாரதியாரும் அவரது மாணவர் பாரதிதாசனும் பேசிக் கொண்டிருந்த போது  பாரதத் தாய்க்கு ஒரு சிலை செய்ய வேண்டும் என்ற அவரது விருப்பத்தை பாரதிதாசனிடம் கூறியிருக்கிறார் பாரதியார்.

 பாரதிதாசனும் ஒரு சிற்பியை வரவழைத்து பாரதத் தாய்க்கு சிலை செய்ய சொன்னார்.  சிற்பி சிலை தயாரிக்கத் தொடங்கியபோதே அவருக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. சிலையை ஏழ்மையாக இருப்பது போல் எளிமையாகச் செய்வதா? அல்லது ஆடை ஆபரணங்களுடன் வசதியாக இருக்கும்படி செய்வதா? என்று கேட்டார் சிற்பி. 

இதைக் கேட்ட பாரதிக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. “என் பாரதத் தாயை ஏழை என்று எப்படிச் சொல்லலாம்? எல்லாச் செல்வங்களும், வளங்களும் என் பாரதத்தாய்க்கு இருக்கத்தானே செய்கின்றன. தங்கம், வைரம், நெல், கோதுமை இவையெல்லாம் எங்கள் நாட்டில் விளையவே இல்லையா? என்றுமே வற்றாத ஜீவநதிகளும், ஆறுகளும் ஓடத்தானே செய்கின்றன. எனவே, என் பாரதத் தாயை மிகுந்த செல்வச் செழிப்போடும், ஆடை, ஆபரணங்களோடும் இருப்பது போலச் செய்யுங்கள்” என்றார் பாரதியார் . 

இன்று நாம் காணும் பாரதத் தாய் பாரதியின் விருப்பப்படியே ஆடை, ஆபரணங்களோடு வடிவமைக்கப்பட்டுக் காட்சி தருகிறாள். அனால் ஏழை ஏழையாகவே இருக்கின்றனர்..நாடு சுதந்திரமடைந்து 76 ஆண்டுகள் கடந்த நிலையிலும்.......பாரதியாரின் இந்த கவிதை வரிகளை நெஞ்சில் நிறுத்திக்கொள்ளுங்கள்..


வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி

மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்

பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.


சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்.


வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்

வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,

எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே

எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.


முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,

மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,

நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே

நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே.


சிந்து நதியின்மிசை நிலவினி லே

சேர நன்னாட்டிளம் பெண்களுட னே

சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்

தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.


கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்

சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு

சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.


காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்

ராசபுத் தானத்து வீரர் தமக்கு

நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.


பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்

பண்ணி மலைகளென வீதி குவிப்போம்

கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்

காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்


ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்

ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்

ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்

உண்மைகள்சொல்வோம்பல வண்மைகள் செய்வோம்.


குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்

கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்

நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்

ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்


மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்

வானையளப் போம்கடல் மீனையளப்போம்

சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்

சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்.


காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்

கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்

ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்

உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே

தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்

நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்

நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்.


தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்- பாரதியார்

 பாரதியார்

  • பெற்றோர் சின்னசாமி – இலக்குமி அம்மையார்
  • பிறப்பு தூத்துக்குடி மாவட்டம் – எட்டயபுரம்
  • காலம் 11.12.1882 –  11.09.1921
  • நூல்கள் குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, இசையின் பெருமை
  •  ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களை எழுதியுள்ளார்.
  • சிறப்புப் பெயர்கள் : மகாகவி, தேசியக்கவி, விடுதலைக்கவி
  • புதுக்கவிதையின்முன்னோடி, பாட்டுக்கொரு தலைவன், தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
  • சிந்துக்குக் தந்தை, செந்தமிழ்தேனீ, புதிய அறம்பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன், நீ துயில் நீக்கப் பாடி வந்த நிலா என பாரதிதாசனால் பாராட்டப்பெற்றவர்.
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி என கவிமணி பாராட்டினார்
  • சுதேச மித்திரன், இந்தியா, சக்கரவரித்தினி, விஜயா முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்துள்ளார். கர்மயேகாகி, பாலபாரத், சூர்மயோதயம் போன்ற வேற பத்திரிக்கைகளையும் நடத்தினார்.
  • சாதி இரண்டொழிய வேறில்லையென்ற தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம் என்று முழங்கியவர் பாரதியார் ஆவார். இவர் மிகச்சிறந்த போராட்ட வீரர்.
  • பாரதியாரின் கவிதைகள் 20ஆம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தன. இவர் தேசியக்கவிஞர் எனப்பாராட்டப் பெற்றவர்.
  • மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி, எளிய மக்களை நோக்கிக் கவிதை கருவியைத் திருப்பி அமைத்த பெருமை பாரதியைச் சாரும். மக்கள் மேம்பாட்டை அடியொற்றியே அவரது கவிதைகள் அமைந்துள்ளன. தேசிய ஒருமைபாட்டின் உயர்வினை விளக்கும் வகையில் அவரது கவிதை அமைந்திருக்கும்.
  • மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.
  • இவரது முக்கியமான பாடல்கள் மற்றும் மேற்கோள்கள்
  • “முப்பதுகோடி முகமுடையாள் உயிர்
  • மொய்ம்புற ஒன்றுடையாள்
  • “பிறனாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
  • தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
  • “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”
  • “தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்”
  • “காக்கை குருவி எங்கள் ஜாதி”
  • “மாந்தர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”
  • “ஓடி விளையாடு பாப்பா”
  • “வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்”
  • “தண்ணீர் விட்டா வளர்த்தோம், கண்ணீரால் காத்தோம்”

Monday, 5 June 2023

மான மறத்தி ஒக்கூர் மாசத்தியார்!!!


 மான மறத்தி ஒக்கூர் மாசத்தியார்!!!


ஒரு சமயம் மாசாத்தியார் பொருள் வேண்டிப் புறப்பட்டார். வெகு தொலைவு நடந்து சென்று ஒரு நாட்டின் பெரு நகரம் ஒன்றில் நுழைந்தார். அது சமயம் அந்த நாடு பக்கத்து நாட்டுடன் போரில் ஈடுபட்டிருந்தது. ஊரின் நிலையைப் பார்த்தபடியே ஒரு வீட்டினுள் நுழைந்தார் மாசத்தியார்..

அங்கு இவர் கண்ட காட்சி பெருமிதம் அடையச் செய்தது. நம் நாட்டு மகளிரின் வீரம் எத்தகையது என எண்ணி எண்ணி மகிழுந்து அவர் கண்ட அக்காட்சியை வியந்து ஒரு பாடலாகப் பாடினார்.

அப்பாடல் இதோ.

 கெடுக சிந்தை கடிதிவள் துணிவே.

         மூதின் மகளிர் ஆதல் தகுமே

மேனாளுற்ற செருவிற்கிவள் தன்னை

      யானை எரிந்து களத்தொழிந்தனனே நெருநல் லுற்ற செருவிற்கிவள்கொழுனன்

    பெருநிரை விலக்கி ஆண்டுப் பட்டனனே. இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி

      வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப்

பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி

ஒருமகன் அல்லது இல்லோள்

      செருமுக நோக்கிச் செல்கென விடுமே."                        


இப்பாடலின் பொருள் என்னவென்றால்  

என்னே இவள் துணிவு.இவள் மறக்குடியில் பிறந்தவள் எனக் கூறல் தக்கதே. முன்னாளில் நிகழ்ந்த போரில் இவளது தந்தை யானையைக் கொன்று தானும் இறந்தான். இவள் கணவனோ பசுக்களை பகைவர் கொள்ளாதவாறு விலக்கி போர்க்களத்தே மாண்டான். இன்றும் போர்ப்பறை ஒலி கேட்டது.

இவளது முகத்தில் மறத்தீ கிளர்ந்து எழுந்தது. தனக்கு ஒரே மகன் இவன் மட்டும் தான் இருக்கிறான் என எண்ணி சும்மா இருக்கவில்லை.. போருக்கு தன் மகனை அனுப்புவது என முடிவு செய்தாள். தன் மகனை அருகே அழைத்து

அவன் தலையில் எண்ணெய் பூசி இழுத்து முடித்தாள். அரையில் தூய வெண்ணிற ஆடையை எடுத்து உடுத்தினாள்.

அம்மகன் கையில் கூர்மையான வேலோன்றைத் தந்தாள்.

அவன் முகத்தை நோக்கினாள் "மகனே! உன் தந்தையும் தனையரும் போர்க்களத்தே பொருது மாண்டனர். நம் மறக்குலப் பெருமையை நிறுவினர். நீயும் அவர்போன்று போருக்குச் செல்க " என அனுப்பி வைத்தாள்.

அந்த வீர மங்கையின் செயல் நம்மால் சிந்தித்து பார்க்க இயலாதவாறு உள்ளது..பாரத தாயின் வயிற்றில் பிறந்த நாம் சிறிது அளவாயினும் நம் கண்முன் நடக்கும் அநீதிகளை களைய முன் வர வேண்டும்.

நன்றி...

மனித இரத்தம்

  மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் .  இரத்தத்தின்  பகுதிப்  பொருள்கள்  இரத்தம்  ...