வகைப்பாட்டியலின் வரலாறு:
· அரிஸ்டாடில் உயிரினங்களை தாவரங்கள்,விலங்குக்ள் என இரண்டு வகைகளாகப் பிரித்தார்
· மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்ப்டும் ஹிப்போகிரேட்ஸ் மருத்துவ அடிப்படையில்
உயிரினங்களை வகைப்படுத்தினார்
·
சிற்றினம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் – ஜான்ரே
·
கரோலஸ் லின்னேயஸ் இருசொல் பெயரிடும்முறையை அறிமுகப்படுத்தினார். இவரே "வகைப்பாட்டியலின் தந்தை" என அழைக்கப்படுகிறார்
·
முதல் சொல் குறிப்பிட்ட உயிரினத்தின் பேரினத்தையும், இரண்டாம் சொல்
குறிப்பிட்ட உயிரினத்தின் இனத்தையும் குறிக்கின்றன.
இருசொற்பெயர்கள் எ.கா
கரப்பான் பூச்சி – பெரிப்பிளானேட்டா அமெரிக்கானா
வீட்டு ஈ – மஸ்கா டொமஸ்டிகா
தவளை – ராணா ஹெக்ஸாடாக்டைலா
புறா - கொலம்பியா லிவியா
மனிதன் – ஹோமோ செப்பியன்ஸ்
தக்காளி – லைக்கோபெர்சிகான் எஸ்குலண்டம்
மா – மாஞ்சிஃபெரா இண்டிகா
அரிசி – ஒரைசா சட்டைவா
ஐந்துலக வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் R.H.விட்டேக்கர்
No comments:
Post a Comment