Today Current Affairs- 07-11-2023
இந்தியா-பூடான் இடையேயான ரயில் வழித்தடம்
- பூடான் அரசர் வாங்சுக், இந்திய பிரதமர் மோடி சந்திப்பில் இந்தியா-பூடான் இடையேயான ரயில் வழித்தடம் தொடங்குவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய பணிகள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
National Current Affairs
ஹீராலால் சமாரியா
- ஹீராலால் சமாரியா இந்திய தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
50,000 விதைப்பந்து
- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படையானது வான் வழியாக 50,000 விதைப்பந்துகளை தூவியுள்ளது.
- இந்த விதைப்பந்தினை ஐ.என்.எஸ். தேசாய் ஹெலிக்காப்டர் மூலம் விதைத்துள்ளது.
- 26 ஜனவரி 1950-ஆம் ஆண்டு இந்திய கடற்படையானது துவக்கப்பட்டது.
பாரத் கோதுமை மாவு
- பொதுமக்களுக்கு மலிவு விலையில் கோதுமை மாவு விற்பனைக்காக 100 நடமாடும் விற்பனை வாகனங்களை மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்துள்ளார்
- இதற்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு உணவு, பொது விநியோகத்துறையானது பாரத் கோதுமை மாவு திட்டத்தினை துவங்கியள்ளது.
- 1கிலா கோதுமை மாவானது ரூ.27.50 மிகாமல் மக்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
சிறுத்தை புலி தனிப்படை (Leopard Task Force)
- சிறுத்தைகளுக்காக பெங்களூருவில் சிறுத்தை புலி தனிப்படை (Leopard Task Force) அமைக்கப்பட உள்ளது.
Sports Current Affairs
ஏஞ்சலோ மேத்யூஸ்
- இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் தனது விக்கெட்டினை பறிகொடுத்த முதல் சர்வதேச கிரிக்கெட் வீரராகியுள்ளார்.
- கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் ஆட்டமிழந்த பின் அடுத்த வீரர் அடுத்த 3 நிமிடங்களுக்கு அவரது முதல் பந்தினை சந்திருக்க வேண்டும். இல்லையெனில் டை அவுட் முறையில் தனது விக்கெட்டினை பறிகொடுப்பார்.
ஃபார்முலா 1 ரேஸின் – மேக்ஸ் வெர்ஸ்டாபென்
- நெதர்லாந்து அணி வீரரும், ரெட் புல் அணி டிரைவரான மேக்ஸ் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றுள்ளார்.
- இது நடப்பு சீசின் இவரது 20வது வெற்றியாகும்.



