ஒரு புத்தகம் / ஒரு ஆசிரியர் / ஒற்றை வரி வாழ்க்கையே புரட்டி போடும்???
3 வயதுவரை ஐன்ஸ்டீன் பேச்சாற்றல் இல்லாத குழந்தையாக இருந்தார். அவர் பள்ளியில் எடுத்த அதிகப்படியான மதிப்பெண் நூற்றுக்கு 50 தான். சிறு வயது முதல் இசை கேட்டு ரசிப்பதும், வயலின் இசைப்பதும் ஐன்ஸ்டீனுக்கு பிடித்தமான விஷயங்கள்.
ஒரு நாள் பள்ளியில் அவரது ஆசிரியர் ஐன்ஸ்டீனிட்ம் குழந்தைகளுக்கான அறிவியல் புத்தகம் ஒன்றைத் தந்தார். அதில் "மின்சாரக் கம்பத்துக்குள் மின்சாரம் பாயும் வழி எங்கும் நாமும் ஓடினால் எப்படி இருக்கும்?" என எழுதியிருந்தது.
அதைப் படித்தவுடன் ஐன்ஸ்டீனின் அறிவியல் கற்பனைகள் விரியத் தொடங்கின. "ஒலி என்பது அலையாக இருந்தால் அது உறைந்த நிலையில்தான் காட்சி அளிக்கும். ஆனால் ஒளி பாய்கிறதே. இது அணு பற்றிய கருத்தியலுக்குப் புறம்பானதே." என மனதில் ஒளியின் ஓட்டத்தைக் காண தொடங்கினார். அன்று தோன்றியக் காட்சியை 10 வருடங்களாக அசைபோட்டதின் விளைவாகவே சிறப்புச் சார்புக் கோட்பாடு E=MC2 என்ற கூற்று 1905ல் இயற்பியல் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment