மான மறத்தி ஒக்கூர் மாசத்தியார்!!!
ஒரு சமயம் மாசாத்தியார் பொருள் வேண்டிப் புறப்பட்டார். வெகு தொலைவு நடந்து சென்று ஒரு நாட்டின் பெரு நகரம் ஒன்றில் நுழைந்தார். அது சமயம் அந்த நாடு பக்கத்து நாட்டுடன் போரில் ஈடுபட்டிருந்தது. ஊரின் நிலையைப் பார்த்தபடியே ஒரு வீட்டினுள் நுழைந்தார் மாசத்தியார்..
அங்கு இவர் கண்ட காட்சி பெருமிதம் அடையச் செய்தது. நம் நாட்டு மகளிரின் வீரம் எத்தகையது என எண்ணி எண்ணி மகிழுந்து அவர் கண்ட அக்காட்சியை வியந்து ஒரு பாடலாகப் பாடினார்.
அப்பாடல் இதோ.
கெடுக சிந்தை கடிதிவள் துணிவே.
மூதின் மகளிர் ஆதல் தகுமே
மேனாளுற்ற செருவிற்கிவள் தன்னை
யானை எரிந்து களத்தொழிந்தனனே நெருநல் லுற்ற செருவிற்கிவள்கொழுனன்
பெருநிரை விலக்கி ஆண்டுப் பட்டனனே. இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப்
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே."
இப்பாடலின் பொருள் என்னவென்றால்
என்னே இவள் துணிவு.இவள் மறக்குடியில் பிறந்தவள் எனக் கூறல் தக்கதே. முன்னாளில் நிகழ்ந்த போரில் இவளது தந்தை யானையைக் கொன்று தானும் இறந்தான். இவள் கணவனோ பசுக்களை பகைவர் கொள்ளாதவாறு விலக்கி போர்க்களத்தே மாண்டான். இன்றும் போர்ப்பறை ஒலி கேட்டது.
இவளது முகத்தில் மறத்தீ கிளர்ந்து எழுந்தது. தனக்கு ஒரே மகன் இவன் மட்டும் தான் இருக்கிறான் என எண்ணி சும்மா இருக்கவில்லை.. போருக்கு தன் மகனை அனுப்புவது என முடிவு செய்தாள். தன் மகனை அருகே அழைத்து
அவன் தலையில் எண்ணெய் பூசி இழுத்து முடித்தாள். அரையில் தூய வெண்ணிற ஆடையை எடுத்து உடுத்தினாள்.
அம்மகன் கையில் கூர்மையான வேலோன்றைத் தந்தாள்.
அவன் முகத்தை நோக்கினாள் "மகனே! உன் தந்தையும் தனையரும் போர்க்களத்தே பொருது மாண்டனர். நம் மறக்குலப் பெருமையை நிறுவினர். நீயும் அவர்போன்று போருக்குச் செல்க " என அனுப்பி வைத்தாள்.
அந்த வீர மங்கையின் செயல் நம்மால் சிந்தித்து பார்க்க இயலாதவாறு உள்ளது..பாரத தாயின் வயிற்றில் பிறந்த நாம் சிறிது அளவாயினும் நம் கண்முன் நடக்கும் அநீதிகளை களைய முன் வர வேண்டும்.
நன்றி...

No comments:
Post a Comment