Showing posts with label Botany. Show all posts
Showing posts with label Botany. Show all posts

Friday, 3 November 2023

தாவரங்களின் அசைவுகள் :

 


தாவரங்களின் அசைவுகள் :

*விலங்குகளைப் போன்று தாவரங்கள் இடம்விட்டு இடம் நகராது. ஆனால் இவற்றின் பாகங்கள் ஒளி, நீர், மண் போன்ற ஏதேனும் ஒரு புறக்காரணித் தூண்டலுக்கு ஏற்ப வளர்ச்சி இயக்கத்தை ஏற்படுத்தும். எனவே தூண்டலின் திசைக்கு ஏற்பத் தாவரப்பாகங்களில் ஏற்படும் இயக்கம் சார்பசைவு எனப்படும்.
1. சார்பசைவு :

*சார்பசைவு மூன்று வகைப்படும்.
(i) ஒளிச்சார்பசைவு : சூரிய ஒளித்தூண்டலின் திசைக்கேற்ப மற்றும் திசையை நோக்கி எதிராகவோ தாவரங்களின் பாகங்கள் வளர்ச்சி அடைவதே ஒளிச்சார்பசைவு எனப்படும்.
ஒளியின் தூண்டுதலால் தண்டு ஒளியின் திசையை நோக்கி வளரும். ஆதலால், தண்டு நேர் ஒளிச் சார்பசைவு கொண்டது. ஒளியின் திசைக்கு எதிராக வேர் வளரும். ஆதலால், வேர் எதிர் ஒளிச் சார்பசைவு கொண்டது என்கிறோம்.

(ii) புவிச் சார்பசைவு : வேர்கள் புவிஈர்ப்புத் திசைக்கு ஏற்றவாறு வளரும். இதற்குப் புவிச்சார்பசைவு என்று பெயர். வேர்கள் நேர் புவிச்சார்பசைவு கொண்டது. தண்டு எதிர் புவிச்சார்பசைவு கொண்டது.

(iii) நீர்ச்சார்பசைவு : தாவரத்தின் பாகங்களில் தண்டுகள் போலன்றி வேர்கள் நீரை நோக்கி வளரும். ஆதலால் வேர் நேர் நீர்ச்சார்பசைவு கொண்டது என்றும் தண்டு எதிர் நீர்ச்சார்பசைவு கொண்டது என்கிறோம்.

2. தொங்கும் அசைவுகள் :
தொட்டாற்சிணுங்கி தாவரம் தொடுதலுக்குப் பதில்வினை புரியக் கூடியது. தாவரத்தைத் தொட்டவுடன் இலைகள் மூடிக் கொள்கின்றன. இலைகள் மூடிக் கொள்ளல் வளர்ச்சியினால் அன்று. தாவரத்திற்குள் ஏற்படும் துலங்கலின் விளைவு ஆகும். இஃது அதிர்வுக்கு ஏற்படும் துலங்கலாகும். இவை தொங்கும் அசைவுகள் எனப்படும்.


இலையின் மாற்றுரு - தண்டின் மாற்றுரு -

 

இலையின் மாற்றுரு - தண்டின் மாற்றுரு :

சில தாவரங்களில் இலைகள் கொடுக்கப்பட்டுள்ளதைப் போன்று மாற்றுரு அடைந்துள்ளன.
1. இலைப் பற்றுக்கம்பி : சில தாவரங்களில், இலை நலிந்த சுருள்கம்பி போன்று - அமைந்து பற்றி ஏற உதவும் பற்றுக் கம்பியாக மாறுபாடு அடைந்து இருக்கும். எ.கா. பட்டாணி.

2. குடுவைத் தாவரம் : சில தாவரங்களில் நைட்ரஜன் பற்றாக்குறையை ஈடுசெய்ய இலை முழுமையாக மாறுபாடு அடைந்து பூச்சியைப் பிடிக்க ஏதுவாகக் குடுவை வடிவத்தில் இருக்கும். எ.கா. நெப்பன்ந்த ஸ்.

3. இலைமுட்கள் : சப்பாத்திக்கள்ளியில் இலைகள் மேற்புறத்தில் முழுமையாக - முட்களாக மாறியுள்ளன. இம்முட்கள் நீராவிப் போக்கைக் குறைக்கின்றது. எ.கா. சப்பாத்திக்கள்ளி


4. பை : யூட்ரிகுலேரியா தாவரத்தில் சில இலை பூச்சியைப் பிடிக்க ஏதுவாகப் பை போன்ற அமைப்பாக மாறியுள்ளன.

தண்டின் மாற்றுரு :

 தண்டின் இயல்பான பணிகளைத் தவிர, தாவரங்கள் சிலவற்றில் தண்டுகள் சிறப்பான பணிகளைச் செய்கின்றன. இத்தாவரங்களில், தண்டின் ஒரு பகுதியோ முழுவதுமாகவோ அப்பணியைச் செய்வதற்கென மாறுபாடு அடைந்துள்ளன. அத்தண்டுகள் மாற்றுரு அடைந்த தண்டுகள் எனப்படும்.
1. தரைகீழ்த் தண்டு மாற்றுரு :
* சில தாவரங்களின் தண்டுகள் தரைகீழ்த் தண்டுகளை உருவாக்குகின்றன. இவை உணவைச் சேமிக்கின்றன. இவை பல வகைப்படும்.

(i) கிழங்கு : தரைகீழ்த் தண்டுகளின் பருத்த நுனிப்பகுதியே கிழங்கு எனப்படும். அதிக உணவைச் சேமித்து வைக்கின்றன. எ.கா. உருளைக்கிழங்கு

(ii) மட்டநிலத் தண்டு : இவை தடித்த கிடைமட்டமான தரைகீழ்த் தண்டு. - எ.கா. இஞ்சி.

2. தரைமேல் மாற்றுரு :
பொதுவாக மொட்டுகள் கிளைகளாகவோ மலர்களாகவோ வளர்ச்சியடையும். சில தாவரங்களில் மொட்டுகள் சில குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்காக மாறுபாடு அடைந்துள்ளன. அவை
(i) தண்டு பற்றுக்கம்பிகள் : சில தாவரங்களில், கோண மொட்டு பற்றுக்கம்பியாக மாறுபாடு அடைந்து இருக்கும். இவை ஆதாரத்தைப் பற்றிக்கொள்ள - உதவுகின்றன.
எ.கா. புடலங்காய்.

(ii) முட்க ள் : சில தாவரங்களில், கோண மொட்டு முட்களாக மாறுபாடு - அடைந்து இருக்கும்.
எ.கா. காகிதப்பூ

(iii) இலைத்தொழில் தண்டு : சில வறண்ட நிலத் தாவரங்களில், இலைகள் முட்களாக மாறியுள்ளன. தண்டு தட்டையாக இலை போல மாறி இலையின் பணியைச் செய்கின்றது. இத்தண்டே இலைத்தொழில் தண்டு எனப்படும்.
எ.கா. சப்பாத்திக்கள்ளி.

 3.தரை ஒட்டிய தண்டு மாற்றுரு :
உடல இனப்பெருக்கத்திற்காக இவை மாற்று அடைந்துள்ளன. சில தாவரங்களில் தண்டு நலிந்தவை. இவை தரையில் கிடைமட்டமாக அல்லது தரையின் மேற்பரப்பில் புதைந்தும் காணப்படும். கணுக்களில் இருந்து தரையொட்டி கிளைகளும், அடிப்பகுதியில் வேற்றிட வேர்களும் தோன்றுகின்றன. இவை படர்கொடி எனப்படும். படர்கொடிகள் இரண்டு வகைப்படும்.
(i) ஓடு தண்டு -எ.கா. புல், பூசணி
(ii) ஸ்டோலன்- எ.கா. ஸ்ட்ராபெர்ரி

அமேசான் அல்லி தாவரத்தின் இலையின் விட்டம் 7அடி. அதன் மலர் 12 முதல் 16 அங்குலம் உடையது.

வேர் பற்றி தகவல் -1


 ஆணிவேரின் மாற்றுரு :

1. சுவாச வேர்கள் :
 கடற்கரை ஓரம் உள்ள சதுப்பு நிலங்களில் உள்ள தாவரங்களில் உப்பு நிறைந்த நீருக்குள் புதைந்திருக்கும். சாதாரண வேர்களில் இருந்து செங்குத்தான வேர்கள் கிளம்பி தரைக்கு மேல் வளர்கின்றன. இவையே சுவாச வேர்கள் எனப்படும். இவை வாயுப் பரிமாற்றத்திற்கு உதவுகின்றன.
எ.கா. அவிசின்னியா (வெள்ளை அலையாற்றி) தமிழ்நாட்டில் பிச்சாவரத்தில் காணப்படுகிறது.

2. சேமிப்பு வேர்கள் :
முதன்மை வேர்கள் உணவைச் சேமித்து வைப்பதனால் பருத்துச் சதைப்பற்றுடன் காணப்படுகின்றன. அவை அவற்றின் வடிவத்தின் அடிப்படையில் மூன்று வகைப்படும்.

(i) கூம்பு வடிவம் : வேரின் மேல் பகுதியில் அகன்றும், அடிப்பகுதியை நோக்கிப் படிப்படியாகக் குறுகியும் கூம்பு வடிவத்தில் காணப்படும். எ.கா. கேரட்.

(ii) கதிர் வடிவம் : வேரின் மையப்பகுதி பருத்தும், இரு முனைப்பகுதியும் படிப்படியாகக் குறுகி, கதிர் போன்ற வடிவத்தில் காணப்படும். எ.கா. முள்ளங்கி.

(iii) பம்பர வடிவம் : வேரின் மேல் பகுதி மிக அகன்றும், நுனி திடீரென்று வால் போல நீண்டும் குறுகியும் காணப்படும். எ.கா. பீட்ருட், டர்னிப்



வேற்றிட வேரின் மாற்றுரு :
1. சேமிப்பு வேர்கள் :
(i) வேர்க்கிழங்குகள் : சில வேற்றிட வேர்கள் உணவைச் சேமித்து வைத்து, பருத்து, குறிப்பிட்ட வடிவம் இல்லாமல் இருக்கும். எ.கா. சர்க்கரைவள்ளிக் கிழங்கு

(ii) கொத்து வேர்கள் : தண்டின் அடிப்பகுதியில் பருத்த வேர்கிழங்குகள் கொத்து கொத்தாகக் காணப்படும். எ.கா. டாலியா.

2. தாங்கு வேர்கள் :
(i) தூண் வேர்கள் : மரத்தின் கிளைகளில் இருந்து வேர்கள் தோன்றுகின்றன. இவ்வேர்கள் பூமியை நோக்கிச் செங்குத்தாக வளர்ந்து மண்ணில் ஊன்றுகின்றன. சிறிதுசிறிதாக இவை தடிமனாகித் தூண்களைப் போல மரத்தைத் தாங்குகின்றன இவ்வேர்களே தூண்வேர்கள் எனப்படும்.
எ.கா. ஆலமரம்.

(ii) முண்டு வேர்கள் : சில தாவரங்களில், மெலிந்த தண்டின் அடிப்பகுதியில் கணுக்களிலிருந்து சிறிய தடிமனான வேர்கள் தோன்றுகின்றன. இவை சாய்வாகத் தரையை நோக்கி வளர்ந்து தாவரத்துக்குக் கூடுதல் ஆதாரத்தைத் தருகிறது. இந்த வேர்கள் முண்டு வேர்கள் எனப்படும்.
எ.கா. சோளம், கரும்பு.


3. தொற்றுவேர்கள் :
 சில தாவரங்கள் வேறு மரங்களின் கிளைகளில் வளர் பவை. இவை உணவிற்காக அன்றி இருப்பிடத்திற்காக மட்டுமே சார்ந்து இருக்கும். இத்தாவரங்களின் வேர்கள் காற்றில் அசைந்தாடும். காற்றிலுள்ள ஈரப்பதத்தை வேரில் உள்ள வெலாமன் திசு உறிஞ்சுகிறது. இவ்வகை வேர்கள் தொற்றுவேர்கள் எனப்படும். எ.கா. வாண்டா (ஆர்கிட்)

4.ஒட்டுண்ணி வேர் :
 சில ஒட்டுண்ணித் தாவரங்கள், ஓம்புயிரித் தாவரத்தின் திசுக்களில் வேர்களை உள்ளே நுழைத்து உணவை உறிஞ்சுகின்றன. இவ்வேர்கள் ஒட்டுண்ணி வேர்கள் எனப்படும். எ.கா. கஸ்குட்டா.


Thursday, 2 November 2023

தாவரத்தின் அமைப்பு மற்றும் செயல்கள்-2 -தண்டு தொகுப்பு-இலை


தாவரத்தின் அமைப்பு மற்றும் செயல்கள்-2 

தண்டு தொகுப்பு

மண்ணிற்கு மேற்பகுதியில் உள்ள அனைத்தும் தண்டு தொகுப்பு என அழைக்கிறோம். இதனுடைய மைய அச்சு தண்டு ஆகும்.

தண்டு பகுதியில் கணுக்களும் கனுவிடை பகுதிகளும் உள்ளன.

 

கணு என்பது தண்டின் இலைகள் தோன்றும் பகுதி கணு எனப்படும்.

 

கணுவிடை பகுதி என்பது இரண்டு கணுக்களுக்கு இடையே உள்ள பகுதி ஆகும்.

 

இலைகோணம் என்பது இலையின் அடிப்பகுதிக்கும் தண்டிக்கும் இடையே உள்ள கோணம் இலைக்கோணம்.

 

 

தண்டின் வேலை:

கிளைகள் இலைகள் மலர்கள் மற்றும் கனிகளை தண்டுகள் தாங்குகின்றன.

 

வேரினால் உறிஞ்ச பட்ட நீர் மற்றும் கனிமங்கள் தண்டின் வழியாக தாவரத்தின் மற்ற பாகங்களுக்கு கடத்தப்படுகின்றன.

 

இலைகளில் தயாரிக்கப்படும் உணவு தண்டின் வழியாக தாவரத்தின் பிறப்பாக உங்களுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.

 

சில தாவரங்கள் உணவை தண்டுப் பகுதியில் சேமித்து வைக்கின்றன எடுத்துக்காட்டு: கரும்பு

 

இலை

 

தண்டின் கனவின் மேல் விரிந்த தட்டையான பசுமை நிறத்தில் தோன்றும் புற அமைப்பு இலையாகும்.

இலையில் உள்ள பகுதிகள் இலைக்காம்பு 

இலை பரப்பு

 மைய நரம்பு 

இலை அடி பகுதி 

இலை அடி செதில் 

பச்சையம் 

இலை துகள்கள்

 இணைக்காம்பு என்பது தண்டு மற்றும் இலையை இணைக்கும் காம்பு பகுதி.

 பசுமையான தட்டையான பகுதிக்கு இலைத்தாள் அல்லது இலை பரப்பு.

 இலையினுடைய மையத்தில் உள்ள நரம்பிற்கு மைய நரம்பு.

 தண்டு அல்லது கிளையுடன் இணைக்கப்பட்டுள்ள இலையின் பகுதி இலையடி பகுதி எனப்படும்.

 

ஒருசில இலைகளின்  அடிப்பகுதியில் இரண்டு சிறிய பக்கவாட்டு வளரிகள் உள்ளன. அவற்றிற்கு இலையடி செதில்கள் எனப்படும்.

 

இலைகள் பச்சை நிறத்தில் இருப்பதற்கான காரணம் அவற்றில் உள்ள பச்சை நிறமிகளான பச்சையமாகும்.

 

இலைகளின் அடிப்பகுதியில் உள்ள நுண்ணிய துளைகள் இலைத்துணைகள் எனப்படும்.

 

இலையின் வேலை:

ஒளிச்சேர்க்கை மூலம் உணவை தயாரிக்கவும், சுவாசித்தலுக்கும், இலை துளைகள் வழியே நீராவி போக்கு நடைபெறுகிறது.

 

விக்டோரியா அமேசோனிகா என்ற தாவரத்தின் இலை மூன்று மீட்டர் விட்டமும், நன்கு வளர்ச்சி அடைந்த இலையின் மேற்பரப்பு 45 கிலோ கிராம் எடை கொண்டது.

 

தாவரங்களை பூவின் அடிப்படையில் இரண்டு வகைகளாக பிரிக்கலாம் பூக்கும் தாவரங்கள் எடுத்துக்காட்டு சூரியகாந்தி மற்றும் பூவா தாவரங்கள் எடுத்துக்காட்டு ரிக்ஸியா

 

தாவரங்களை விதை அமைந்திருக்கும் அடிப்படையில் இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

 

ஆஞ்சியோஸ்பெர்ம்கள்- (மூடிய விதை தாவரங்கள் -விதைகள் கனிகளில் புதைந்திருக்கும்) எடுத்துக்காட்டு மா

ஜிம்னோஸ்பெர்ம்கள்-(திறந்த விதை தாவரங்கள் -விதைகள் கனிகளில் புதைந்து இருக்காது) எடுத்துக்காட்டு சைகஸ்

 

மனித இரத்தம்

  மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் .  இரத்தத்தின்  பகுதிப்  பொருள்கள்  இரத்தம்  ...