Showing posts with label தாயே விட பெரிய சக்தி இந்த உலகத்தில் எதும் இல்லை.... Show all posts
Showing posts with label தாயே விட பெரிய சக்தி இந்த உலகத்தில் எதும் இல்லை.... Show all posts

Sunday, 14 May 2023

தாயே விட பெரிய சக்தி இந்த உலகத்தில் எதும் இல்லை...

 தாயே விட பெரிய சக்தி இந்த உலகத்தில் எதும் இல்லை...

கொரில்லா தாக்குதல் என்றழைக்கப்படும் மறைமுகமான நிலப்பரப்பில் பதுங்கியிருந்து அதிவிரைவாக, அதிர்ச்சி வைத்தியம் அளித்து தன்னை விட பலம் வாய்ந்த எதிரிகளை கூட துவம்சம் செய்தல் என்று சிவாஜியின் போர் பாணியே தனி. சொல்லப்போனால் மகாராஷ்டிராவை எத்தனையோ மன்னர்கள் ஆண்டிருந்தாலும், சத்ரபதி சிவாஜியை போல் திறமையான மன்னர்கள் எவரும் இருந்தது இல்லை..சிவாஜியின் இத்தனை சிறப்புகளுக்கும் அவரது தாய் ஜீஜாபாய் ஒருவரே காரணம் எனலாம்..
சிவாஜி குழந்தையாக இருந்தபோதே தந்தை ஷாஜி போன்ஸ்லே, மனைவியைக் கைவிட்டுப் பிரிந்து, இன்னொரு திருமணம் செய்து கொண்டு போய்விட்டார். மனதைத் தளரவிடாமல் சிவாஜிக்கு ஒழுக்கத்தையும் வீரத்தையும் ஊட்டி வளர்த்தார் ஜீஜாபாய். தந்தையின் ஆதரவு இல்லாவிட்டாலும்கூட, தாய் தன் குழந்தையை எந்தளவுக்குச் சிறந்த மனிதனாக வளர்க்க முடியும் என்பதற்கு உச்சக்கட்ட உதாரணம் ஜீஜாபாய் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்..
அதிசயங்களே அசந்துபோகும் அதிசயம் அம்மா. அன்னையர் தின
வாழ்த்துக்கள்
May be an image of monument

மனித இரத்தம்

  மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் .  இரத்தத்தின்  பகுதிப்  பொருள்கள்  இரத்தம்  ...