Friday, 23 June 2023

Academics of Athens

                           


 Academics of Athens 


அரிஸ்டாட்டில் கிரேக்க நாட்டில் கி.மு.384 ஆம் ஆண்டு பிறந்தார் . அரிஸ்டாட்டிலின்  தந்தை கிரேக்க நாட்டில்  மன்னர் மாளிகையில் மருத்துவராகப் பணி புரிந்து வந்தார். அரிஸ்டாட்டில் தன் இளமைக் கல்வியைத் தந்தையிடமே பெற்றார்; தனது 17 ஆம் வயதில் ஏதென்ஸ் நகரக் கல்விக் கழகத்தில் (Academics of Athens) சேர்ந்தார். இங்குதான் கிரேக்கத்தில் அப்போது புகழ் வாய்ந்த தத்துவ அறிஞராக விளங்கிய பிளேட்டோவின் மாணவராகும் வாய்ப்பு அரிஸ்டாட்டிலுக்குக் கிடைத்தது. 


ஆசிரியர் பிளேட்டோவும், மாணவர் அரிஸ்டாட்டிலும் ஒருவர் கருத்தை ஒருவர் பாராட்டிப் போற்றியதும் உண்டு; கருத்து வேறுபாடு தோன்றியபோது நாகரிகத்தோடு மறுத்ததும் உண்டு. ஏதென்ஸ் கல்விக் கழகத்தில் கணிதம், தத்துவம், அண்ட அறிவியல் (Cosmic Science), அரசியல் ஆகிய துறைகளை அரிஸ்டாட்டில் ஆர்வத்துடன் கற்றார். பிளேட்டோவின் மறைவிற்குப் பின்னர் அரிஸ்டாட்டில் அங்கு ஆசிரியாகும் வாய்ப்பைப் பெற்றார். மிக விரைவில் தனது அறிவுக்கூர்மையை வெளிப்படுத்திச் சிறந்த ஆசிரியர் என்ற புகழை ஈட்டினார். அப்போது ஆட்சியிலிருந்த மன்னர் பிலிப் தனது மகன் அலெக்ஸாண்டருக்குக் கல்வி கற்பிக்குமாறு அரிஸ்டாட்டிலைக் கேட்டுக்கொண்டார். 


அரிஸ்டாட்டிலிடம் கல்வி கற்ற இம்மாணவன்தான் பின்னாளில் உலகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் கொண்டுவர விரும்பிய மாமன்னன் அலெக்ஸாண்டராக விளங்கினான். தனது ஆசிரியர் அரிஸ்டாட்டிலிடம் அலெக்ஸாண்டர் அளவற்ற அன்பும், மதிப்பும் கொண்டிருந்தான்; ஆசிரியரின் அறிவியல் ஆய்வுப் பணிகள் அனைத்திற்கும் வேண்டிய பொருளுதவி புரிந்து ஒத்துழைப்பு நல்கினான். இயற்கை ஆய்விலும், விலங்குகள் பற்றிய ஆய்விலும் பெரும் நாட்டம் கொண்டிருந்த அரிஸ்டாட்டிலுக்கு மன்னனின் ஆதரவு பேருதவியாக இருந்தது.


1. பொதுவாக விலங்குகளுக்கும் ஆன்மா என்பது உண்டு. ஒவ்வொரு விலங்கினமும் அதற்கே உரிய உடற்கட்டமைப்பைக் குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் பெற்றுள்ளது.

2. வாழ்க்கை வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் உட்பட்டது; எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பது. ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடையும் பொருட்டு இந்த வளர்ச்சி, மாற்றம், இயக்கம் ஆகியன அமைகின்றன.

வாழ்க்கையின் படிநிலைகள், உயர்வு தாழ்வுகள், ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றிற்கு அரிஸ்டாட்டில் முக்கியத்துவம் அளித்தார். இயற்கைப் பண்புகள், வாழ்க்கை முறைகள், செயல் முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உயிரினங்களை அரிஸ்டாட்டில் வகைப்படுத்தினார். 


அரிஸ்டாட்டில் தன் முழு வாழ்வையும் கல்விப் பணிக்கும், ஆய்வுப்பணிக்கும் அர்ப்பணித்துக் கொண்டவர். மிகச் சிறந்த ஆசிரியராகப் பணியாற்றியவர். 

No comments:

Post a Comment

மனித இரத்தம்

  மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் .  இரத்தத்தின்  பகுதிப்  பொருள்கள்  இரத்தம்  ...