Monday, 13 November 2023

வென்றாலும் தோற்றாலும் நல்லதே.


பகவத்கீதையில் ஒரு ஸ்லோகம்

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்க³ம் ஜித்வா வா போ⁴க்ஷ்யஸே மஹீம்|

தஸ்மாது³த்திஷ்ட² கௌந்தேய யுத்³தா⁴ய க்ருதநிஸ்²சய:

விளக்கம் 

இந்த யுத்தத்தில் இறந்தால் சுவர்க்கம் போவாய். வென்றால் இந்த உலகை ஆண்டு அனுபவிப்பாய். எனவே துணிந்து எழுந்து நின்று போர் செய்வாய். 


அர்ஜுனன், அன்பின் வயப்பட்டு, உறவினர்களை கொல்ல மாட்டேன்,  ஆசிரியரை கொல்ல மாட்டேன்  , எனக்கு பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, இந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன் என்கிறான்.

இந்த ஸ்லோகத்தை வேறொரு கோணத்தில் பொருள் கொள்ள வேண்டும்...

ஒரு இளைஞன்  வறுமையான சூழலில்  படித்து வேலைக்குப் போய் கொண்டே மேலே படிக்க நினைக்கிறான். நேரம் இருக்காது. படிப்பது கடினமாக இருக்கும். ரொம்பவும் முயற்சி செய்கிறான். படித்து பட்டம் பெற்றால் நல்லது. ஒரு வேளை முடியவில்லை என்றால், படித்துப் பெற்ற அறிவு நல்லது தானே. ஸ்வர்கம் அல்லது இந்த உலகம் என்று கண்ணன் குறிப்பது  நல்லதை தான் .

வள்ளுவரும் இதையே 

கான முயல் எய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது

விளக்கம் 

குறிபார்த்து முயலை வேல் எறிந்து கொள்வதை விட யானையை எதிர்த்து போர் செய்து அதன் மேல் வேல் எறிந்து அது யானையை கொல்லாமல் போனாலும் பரவாயில்லை என்கிறார்.

யானை மேல் எறிந்த வேல் தப்பி இருக்கலாம். ஆனால், யானையோடு எப்படி போர் செய்வது, அந்த தைரியம், அந்த திட்ட மிடுதல், எல்லாம் அதில் கிடைத்த இலாபம் .
பெரிதாக நினையுங்கள். தோல்வியை பற்றி கவலைப் படாதீர்கள். பெரிய வேலையில் தோற்றாலும் அது கூட நல்லதுதான்.


எனவே  எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாமல்  பெரிதாக எதையாவது தொடங்குங்கள்.

வென்றாலும் தோற்றாலும் அது உங்களுக்கு நல்லதே.




Wednesday, 8 November 2023

Today Current Affairs- 07-11-2023

 


 Today Current Affairs- 07-11-2023


இந்தியா-பூடான் இடையேயான ரயில் வழித்தடம் 

  • பூடான் அரசர் வாங்சுக், இந்திய பிரதமர் மோடி சந்திப்பில் இந்தியா-பூடான் இடையேயான ரயில் வழித்தடம் தொடங்குவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய பணிகள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

National Current Affairs

ஹீராலால் சமாரியா

  • ஹீராலால் சமாரியா இந்திய தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

50,000 விதைப்பந்து

  • ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படையானது வான் வழியாக 50,000 விதைப்பந்துகளை தூவியுள்ளது.
  • இந்த விதைப்பந்தினை ஐ.என்.எஸ். தேசாய் ஹெலிக்காப்டர் மூலம் விதைத்துள்ளது.
  • 26 ஜனவரி 1950-ஆம் ஆண்டு இந்திய கடற்படையானது துவக்கப்பட்டது.

பாரத் கோதுமை மாவு

  • பொதுமக்களுக்கு மலிவு விலையில் கோதுமை மாவு விற்பனைக்காக 100 நடமாடும் விற்பனை வாகனங்களை மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்துள்ளார்
  • இதற்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு உணவு, பொது விநியோகத்துறையானது பாரத் கோதுமை மாவு திட்டத்தினை துவங்கியள்ளது.
  • 1கிலா கோதுமை மாவானது ரூ.27.50 மிகாமல் மக்களுக்கு அளிக்கப்பட உள்ளது.

 சிறுத்தை புலி தனிப்படை (Leopard Task Force) 

  • சிறுத்தைகளுக்காக பெங்களூருவில் சிறுத்தை புலி தனிப்படை (Leopard Task Force) அமைக்கப்பட உள்ளது.

Sports Current Affairs

ஏஞ்சலோ மேத்யூஸ்


  • இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் தனது விக்கெட்டினை பறிகொடுத்த முதல் சர்வதேச கிரிக்கெட் வீரராகியுள்ளார்.
  • கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் ஆட்டமிழந்த பின் அடுத்த வீரர் அடுத்த 3 நிமிடங்களுக்கு அவரது முதல் பந்தினை சந்திருக்க வேண்டும். இல்லையெனில் டை அவுட் முறையில் தனது விக்கெட்டினை பறிகொடுப்பார்.


ஃபார்முலா 1 ரேஸின் – மேக்ஸ் வெர்ஸ்டாபென்

  • நெதர்லாந்து அணி வீரரும், ரெட் புல் அணி டிரைவரான மேக்ஸ் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றுள்ளார்.
  • இது நடப்பு சீசின் இவரது 20வது வெற்றியாகும்.


Monday, 6 November 2023

Today Current Affairs– 06th November 2023

 


Today Current Affairs– 06th November 2023


International Current Affairs

புலாவா ஏவுகணை (Bulava Missile) 

அணுசக்தி நீர்மூழ்கி போர் கப்பலான அலெக்சாண்டர்-3 நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான புலாவா ஏவுகணையை (Bulava Missile) ரஷ்யா ஏவி சோதனை செய்துள்ளது.

National Current Affairs

 எல்லையில்பாதுகாப்பிற்காக தேனீக்கள் 

  • இந்திய எல்லை பாதுகாப்பு படையானது (BSF) மேற்கு வங்கத்தில் இந்திய-வங்கதேச எல்லையில்பாதுகாப்பிற்காக தேனீக்கள் பயன்படுத்தப்பட உள்ளது.  
  • ஒரே நாடு ஒரே பதிவு என்ற பெயரில் தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மருத்துவர்களுக்காக தனி அடையாள எண் வழங்க உள்ளது.
  • நவம்பர் 07-ல் முதற்கட்டமாக மிஸேராமில் 40 பேரவைத் தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் 20 பேரவை தொகுதிகளுக்கும்  தேர்தலினை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
  • குஜராத்தின் காந்திநகரில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான முதல் கல்வி மற்றும் திறன் கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.
  • 2023-ஆம் ஆண்டிற்கான உலகாளவிய பொறுப்பு சுற்றுலா விருதினை கேரளவில் மாநிலம் பெற்றுள்ளது.

Sports Current Affairs

 49வது சதம்

  • உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான விராட்கோலி  தனது 49வது சதம் அடித்துள்ளார்
  • 49 சதங்களை விளாசிய சச்சின் டெண்டுல்கர்  (452) சாதனையை 277 இன்னிங்ஸில் சமன் செய்துள்ளார்.

 FIDE கிராண்ட் ஸ்வீஸ் செஸ்

  • பிரிட்டனில் நடைபெற்று வரும் FIDE கிராண்ட் ஸ்வீஸ் செஸ் தொடரில் மகளிர் பிரிவில்  தமிழக வீராங்கனையான வைஷாலி  சாம்பியன் பட்டத்தினை தட்டிச் சென்றுள்ளார்.

7வது முறையாக சாம்பியன்

  • பிரான்ஸில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவல் நோவக் ஜோகோவிச் 7வது முறையாக சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.
  • மேலும் இவரது 40-வது மாஸ்டர்ஸ் பட்டமாகும்.



Saturday, 4 November 2023

தோற்றால் புலம்பாதே போராடு...

 தோற்றால் புலம்பாதே போராடு...



 ஒரு தவளை கொதிக்கும் நீரில் விழுந்துவிட்டது..

தண்ணீரின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......இது தவளையின் இயல்பு

வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.


தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்தது..


ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியவில்லை...


ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருந்து சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விட்டது...


எது அந்த தவளையை கொன்றது...?


பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள். 


ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......


நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.


ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.


உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று. 


"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"..

 விழுந்தால் அழாதே . . .

எழுந்திரு      

தோற்றால் புலம்பாதே . . .

போராடு           

 கிண்டலடித்தால் கலங்காதே . . .

மன்னித்துவிடு 

              

தள்ளினால் தளராதே . . .

துள்ளியெழு          


  ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .

எதிர்த்து நில்

 கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .

கலங்காமலிரு 


  உதாசீனப்படுத்தினால் உளறாதே . .

உயர்ந்து காட்டு

கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .

அடைந்து காட்டு

மொத்தத்தில் நீ பலமாவாய் 


              

 


Friday, 3 November 2023

மரபும் பரிணாமும்

 


மரபும் பரிணாமும் 


  •  பாரம்பரியக் கடத்துதலை முதன் முதலாக வெளியிட்டவர் கிரிகர் ஜோகன் 
  • தலைமுறை தலைமுறையாக நிகழும் பண்புகள் கடத்தலைப் பாரம்பரியம் எனலாம்
  • தாய்  தந்தை இருவரும் தங்களின் மரபுப் பொருளான (DNA )டி .என் . ஏ மூலம் பண்பு கடத்துதலில்சமப் பங்கினை கொள்வதன் மூலம் பங்களிக்கின்றனர்
  • மெண்டல் தனது தோட்டத்தில் பட்டாணிச் செடியை வைத்து ஆராய்ச்சியை மேற்கொண்டார்
  • மெண்டலின் ஆய்வில் பட்டாணிச் செடியில் இரண்டாம் தலைமுறையில்  பெறப்பட்ட நெட்டை : குட்டை பண்புகள் 3 : 1 என்ற விகிதத்தில் இருந்தன .
  • மெண்டல் ஆஸ்திரிய நாட்டைச்சேர்ந்த  அகஸ்தீனியத் துறவி

  • புறத்தோற்றத்தில் வெளிப்படையாகக் காணப்படும் பண்புகளான நெட்டை அல்லது குட்டை . ஊதா அல்லது வெள்ளை நிறம் போன்றவைப் புறத்தோற்றப் பண்பு (பீனோட்டைப்)
  • இப்பண்புகளுக்குக் காரணமான குரோமோசோம் அல்லது ஜீன் அமைப்பு ஜீனாக்கப்பண்பு (ஜீனோ டைப் ) எனப்பட்டது
  • ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத தன்மைக்கு அல்லீல்கள் என்று பெயர் .
  • அல்லீல்கள் வெளிப்படுத்தும் பண்பிற்கு அல்லீலோ மார்புகள் என்று பெயர் .
ஜீன் பாப்டைஸ் லாமார்க்
  • உடலுறுப்புப் பயன்பாடு பயன்பாடு குறித்து விளக்கியவர்  ஜீன் பாப்டைஸ் லாமார்க்
  • ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு விளக்கினார்
  • தேவையும் எண்ணமுமே இம்மாற்றத்திற்கு காரணம் என்று விளக்கினார்
 சார்லஸ் டார்வின்
  • இயற்கைத் தேர்வு கொள்கையை வெளியிட்டவர் சார்லஸ் டார்வின்
  • பரிணாமம் என்பது எளிய தன்மை கொண்ட உயிரிகளிலிருந்து மேம்பட்ட தன்மை கொண்ட உயிரினங்களில் படிப்படியாக ஏற்படும் மாற்றங்களாகும்

  • 3 - 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் போன்ற ஹோமினிட்டுகள் கிழக்கு ஆப்ரிக்காவிற்கு வந்தனர் .
  • மனித இயல்பை ஒத்திருந்த ஹோமினிட்டுகள் ஹோமோ ஹெபிலிஸ் (மனிதருக்கு ஒப்பான இயல்பினர் ) என்று அழைக்கப்பட்டனர்
  • 3 - 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் - ஹோமினிட்டுகள்
  • 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் - ஹோமோஎரக்ட்டஸ்
  • 1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் - நியாண்டர்தால் மனிதர்கள்
  • 75000 - 10000 ஆண்டுகளுக்கு முன்னர் - தற்கால ஹோமோசெபியன்கள்
  • 10000 ஆண்டுகளுக்கு முன்னர் -  மனிதப் பரிணாமம்
மரபுப்பொறியியல்
  •  மரபுப்பொறியியல் என்பது உயிரியின் குரோமோசோமின் டி என் ஏ வில் புதிதாக மரபியல் தன்மைகளைச் சேர்த்தோ குறைத்தோ மாற்றம் செய்வது ஆகும்

  • எட்வர்ட் ஜென்னர் 1791 - ல் தடுப்பூசிக் கொள்கையை வெளியிட்டார் 
  • டாலி என்பது பிரதியாக்க முறையில் டாக்டர் வில்மட் அவர்களால் ஜூலை 1996 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட செம்மறியாடு ஆகும்

  • மூலச்செல் (ஸ்டெம்செல்) என்பது சிறப்படையாத செல் குழுமம் ஆகும் . இவை  மைட்டாசிஸ் முறையில் பிளவுற்று மிக அதிக செல்களை உருவாக்கும் தன்மையுடையன .
  • உடல் செல் மரபணு மருத்துவம் - குறைபாடு உள்ளவரின் முழு ஜீன் தொகுதியையும் மாற்றும் முறையாகும் . இம் மாற்றம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை .
  • இனச்செல் மரபணு மருத்துவம் - பெற்றோர்களின் அண்டம் அல்லது விந்துச் செல்கள் மாற்றத்தினால் செய்யப்படுவதாகும் .இம்மாற்றம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது  .

வைரஸ்


 வைரஸ்

வைரஸ் கண்டறிந்தவர் - டிமிட்ரி இவனோவ்ஸ்கி
 முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் - புகையிலை மொசைக் வைரஸ்
 வைரஸ் புரத உறை - கேப்சிட்
 ஒரு முழுமையான வைரஸ் - விரியான்
 புகையிலை மொசைக் வைரஸ் வடிவம் - உருளை வடிவம்

வைரஸ் வடிவங்கள்:
1. கோளவடிவம் - H.I.V வைரஸ், இன்ஃபுளுயன்சா
2. நீள் உருளை வடிவம் - புகையிலை மொசைக் வைரஸ்
3. தலைப் பிரட்டை வடிவம் - பாக்டீரியோஃபெஜ்
4. செங்கல் வடிவம் - அம்மை நோய் வைரஸ்


 பாக்டீரியா தாக்கும் வைரஸ் - பாக்டீயோஃபெஜ்

 மனிதர்கள் வைரஸ் நோய்கள்:-
1. HIV - AIDS
2. H1 N1 - பன்றி காய்சல்
3. ராபிஸ்
4. சின்னம்மை
5. பெரியம்மை 
6. சாதரண சலி - ரேனோ வைரஸ்

 தாவரங்கள் தாக்கும் வைரஸ்:
1. புகையிலை - மொசைக் நோய்
2. வாழை - உச்சிக் கொத்து நோய்
3. உருளை - இலை சுருள் நோய்
4. பீட்ரூட் - மஞ்சள் நோய்

 விலங்கு வைரஸ் நோய்கள்:
1. கோழி - அம்மை நோய்
2. மாடு - கோமாரி நோய்


பாக்டீரியா

 


பாக்டீரியா 

பாக்டீரியா பற்றிய சில தகவல்கள்:-
 பாக்டீரியா கண்டுபிடித்தவர் - ஆண்டன் வான் லூன்ஹாக்
 பாக்டீரியா என்பது பாக்டீரியான் என்ற கிரேக்க சொல்லில் இருந்து வந்தது
 பாக்டீரியா செல் சுவர் கேப்சிட்

பாக்டீரியா வடிவம்:
1. காக்கஸ் - கோள வடிவம் (எ.கா.) மைக்ரோக்காக்கஸ், லூக்கோ நாஸ்டாக்
2. பேசில்லஸ் - கோல் வடிவம் (எ.கா.) லாக்டோபேசில்லஸ்
3. ஸ்பைரில்லம் - சுருள் வடிவம் (எ.கா.) லெப்டேஸ்பைரா
4. லிப்ரியோ - கமா வடிவம் (எ.கா.) விப்ரியோ காலரே


 பாலை புளிக்க செய்யும் பாக்டீரியா - லேட்டோபேசிலஸ்
 மாவு புளிக்கச் செய்யும் பாக்டீரியா - லூகோநாஸ்டாக்

 பாக்டீரியா ஏற்படும் நோய்கள் மனிதர்கள் :-

1. டிப்தீரியா - கிரையோ பாக்டீரியம் டிப்தீரியே
2. நிமோனியா - டிப்ளோ காக்கஸ்
நிமோனியா
3. காசநோய் - மைகோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ்
4. பிளேக் - யெர்சினியா பெஸ்டிஸ்
5. ரணஜென்னி (டெட்டனஸ்)
கிஹாஸ்டிரிடியம் டெட்டானி
6. டைபாய்டு - சால்மோனேலியா டைபி
7. காலரா - விப்ரியோ காலரே
8. கக்குவான் இருமல் - ஹீமோபிலியஸ் பெர்டூசுயஸ்
9. தொழு நோய் - மைகோ பாக்டீரியா லெப்ரே

தாவர நோய்கள்:
1. எலுமிச்சை - சாந்தோமோனாஸ் சிட்ரி
2. நெல் - சான்தோமோனாஸ் ஒரைசே
3. பருத்தி - சான்தோமோனாஸ்
மால்வாசியாரம்
4. தக்காளி - சூடோமோனாஸ்
5. உருளை - ஸ்ட்ரோப்டோமைசிஸ்

விலங்கு நோய்கள்:-
1. ஆன்திராக்ஸ் - பேசிலஸ் ஆன்தராசிஸ்

தாவரங்களின் அசைவுகள் :

 


தாவரங்களின் அசைவுகள் :

*விலங்குகளைப் போன்று தாவரங்கள் இடம்விட்டு இடம் நகராது. ஆனால் இவற்றின் பாகங்கள் ஒளி, நீர், மண் போன்ற ஏதேனும் ஒரு புறக்காரணித் தூண்டலுக்கு ஏற்ப வளர்ச்சி இயக்கத்தை ஏற்படுத்தும். எனவே தூண்டலின் திசைக்கு ஏற்பத் தாவரப்பாகங்களில் ஏற்படும் இயக்கம் சார்பசைவு எனப்படும்.
1. சார்பசைவு :

*சார்பசைவு மூன்று வகைப்படும்.
(i) ஒளிச்சார்பசைவு : சூரிய ஒளித்தூண்டலின் திசைக்கேற்ப மற்றும் திசையை நோக்கி எதிராகவோ தாவரங்களின் பாகங்கள் வளர்ச்சி அடைவதே ஒளிச்சார்பசைவு எனப்படும்.
ஒளியின் தூண்டுதலால் தண்டு ஒளியின் திசையை நோக்கி வளரும். ஆதலால், தண்டு நேர் ஒளிச் சார்பசைவு கொண்டது. ஒளியின் திசைக்கு எதிராக வேர் வளரும். ஆதலால், வேர் எதிர் ஒளிச் சார்பசைவு கொண்டது என்கிறோம்.

(ii) புவிச் சார்பசைவு : வேர்கள் புவிஈர்ப்புத் திசைக்கு ஏற்றவாறு வளரும். இதற்குப் புவிச்சார்பசைவு என்று பெயர். வேர்கள் நேர் புவிச்சார்பசைவு கொண்டது. தண்டு எதிர் புவிச்சார்பசைவு கொண்டது.

(iii) நீர்ச்சார்பசைவு : தாவரத்தின் பாகங்களில் தண்டுகள் போலன்றி வேர்கள் நீரை நோக்கி வளரும். ஆதலால் வேர் நேர் நீர்ச்சார்பசைவு கொண்டது என்றும் தண்டு எதிர் நீர்ச்சார்பசைவு கொண்டது என்கிறோம்.

2. தொங்கும் அசைவுகள் :
தொட்டாற்சிணுங்கி தாவரம் தொடுதலுக்குப் பதில்வினை புரியக் கூடியது. தாவரத்தைத் தொட்டவுடன் இலைகள் மூடிக் கொள்கின்றன. இலைகள் மூடிக் கொள்ளல் வளர்ச்சியினால் அன்று. தாவரத்திற்குள் ஏற்படும் துலங்கலின் விளைவு ஆகும். இஃது அதிர்வுக்கு ஏற்படும் துலங்கலாகும். இவை தொங்கும் அசைவுகள் எனப்படும்.


இலையின் மாற்றுரு - தண்டின் மாற்றுரு -

 

இலையின் மாற்றுரு - தண்டின் மாற்றுரு :

சில தாவரங்களில் இலைகள் கொடுக்கப்பட்டுள்ளதைப் போன்று மாற்றுரு அடைந்துள்ளன.
1. இலைப் பற்றுக்கம்பி : சில தாவரங்களில், இலை நலிந்த சுருள்கம்பி போன்று - அமைந்து பற்றி ஏற உதவும் பற்றுக் கம்பியாக மாறுபாடு அடைந்து இருக்கும். எ.கா. பட்டாணி.

2. குடுவைத் தாவரம் : சில தாவரங்களில் நைட்ரஜன் பற்றாக்குறையை ஈடுசெய்ய இலை முழுமையாக மாறுபாடு அடைந்து பூச்சியைப் பிடிக்க ஏதுவாகக் குடுவை வடிவத்தில் இருக்கும். எ.கா. நெப்பன்ந்த ஸ்.

3. இலைமுட்கள் : சப்பாத்திக்கள்ளியில் இலைகள் மேற்புறத்தில் முழுமையாக - முட்களாக மாறியுள்ளன. இம்முட்கள் நீராவிப் போக்கைக் குறைக்கின்றது. எ.கா. சப்பாத்திக்கள்ளி


4. பை : யூட்ரிகுலேரியா தாவரத்தில் சில இலை பூச்சியைப் பிடிக்க ஏதுவாகப் பை போன்ற அமைப்பாக மாறியுள்ளன.

தண்டின் மாற்றுரு :

 தண்டின் இயல்பான பணிகளைத் தவிர, தாவரங்கள் சிலவற்றில் தண்டுகள் சிறப்பான பணிகளைச் செய்கின்றன. இத்தாவரங்களில், தண்டின் ஒரு பகுதியோ முழுவதுமாகவோ அப்பணியைச் செய்வதற்கென மாறுபாடு அடைந்துள்ளன. அத்தண்டுகள் மாற்றுரு அடைந்த தண்டுகள் எனப்படும்.
1. தரைகீழ்த் தண்டு மாற்றுரு :
* சில தாவரங்களின் தண்டுகள் தரைகீழ்த் தண்டுகளை உருவாக்குகின்றன. இவை உணவைச் சேமிக்கின்றன. இவை பல வகைப்படும்.

(i) கிழங்கு : தரைகீழ்த் தண்டுகளின் பருத்த நுனிப்பகுதியே கிழங்கு எனப்படும். அதிக உணவைச் சேமித்து வைக்கின்றன. எ.கா. உருளைக்கிழங்கு

(ii) மட்டநிலத் தண்டு : இவை தடித்த கிடைமட்டமான தரைகீழ்த் தண்டு. - எ.கா. இஞ்சி.

2. தரைமேல் மாற்றுரு :
பொதுவாக மொட்டுகள் கிளைகளாகவோ மலர்களாகவோ வளர்ச்சியடையும். சில தாவரங்களில் மொட்டுகள் சில குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்காக மாறுபாடு அடைந்துள்ளன. அவை
(i) தண்டு பற்றுக்கம்பிகள் : சில தாவரங்களில், கோண மொட்டு பற்றுக்கம்பியாக மாறுபாடு அடைந்து இருக்கும். இவை ஆதாரத்தைப் பற்றிக்கொள்ள - உதவுகின்றன.
எ.கா. புடலங்காய்.

(ii) முட்க ள் : சில தாவரங்களில், கோண மொட்டு முட்களாக மாறுபாடு - அடைந்து இருக்கும்.
எ.கா. காகிதப்பூ

(iii) இலைத்தொழில் தண்டு : சில வறண்ட நிலத் தாவரங்களில், இலைகள் முட்களாக மாறியுள்ளன. தண்டு தட்டையாக இலை போல மாறி இலையின் பணியைச் செய்கின்றது. இத்தண்டே இலைத்தொழில் தண்டு எனப்படும்.
எ.கா. சப்பாத்திக்கள்ளி.

 3.தரை ஒட்டிய தண்டு மாற்றுரு :
உடல இனப்பெருக்கத்திற்காக இவை மாற்று அடைந்துள்ளன. சில தாவரங்களில் தண்டு நலிந்தவை. இவை தரையில் கிடைமட்டமாக அல்லது தரையின் மேற்பரப்பில் புதைந்தும் காணப்படும். கணுக்களில் இருந்து தரையொட்டி கிளைகளும், அடிப்பகுதியில் வேற்றிட வேர்களும் தோன்றுகின்றன. இவை படர்கொடி எனப்படும். படர்கொடிகள் இரண்டு வகைப்படும்.
(i) ஓடு தண்டு -எ.கா. புல், பூசணி
(ii) ஸ்டோலன்- எ.கா. ஸ்ட்ராபெர்ரி

அமேசான் அல்லி தாவரத்தின் இலையின் விட்டம் 7அடி. அதன் மலர் 12 முதல் 16 அங்குலம் உடையது.

வேர் பற்றி தகவல் -1


 ஆணிவேரின் மாற்றுரு :

1. சுவாச வேர்கள் :
 கடற்கரை ஓரம் உள்ள சதுப்பு நிலங்களில் உள்ள தாவரங்களில் உப்பு நிறைந்த நீருக்குள் புதைந்திருக்கும். சாதாரண வேர்களில் இருந்து செங்குத்தான வேர்கள் கிளம்பி தரைக்கு மேல் வளர்கின்றன. இவையே சுவாச வேர்கள் எனப்படும். இவை வாயுப் பரிமாற்றத்திற்கு உதவுகின்றன.
எ.கா. அவிசின்னியா (வெள்ளை அலையாற்றி) தமிழ்நாட்டில் பிச்சாவரத்தில் காணப்படுகிறது.

2. சேமிப்பு வேர்கள் :
முதன்மை வேர்கள் உணவைச் சேமித்து வைப்பதனால் பருத்துச் சதைப்பற்றுடன் காணப்படுகின்றன. அவை அவற்றின் வடிவத்தின் அடிப்படையில் மூன்று வகைப்படும்.

(i) கூம்பு வடிவம் : வேரின் மேல் பகுதியில் அகன்றும், அடிப்பகுதியை நோக்கிப் படிப்படியாகக் குறுகியும் கூம்பு வடிவத்தில் காணப்படும். எ.கா. கேரட்.

(ii) கதிர் வடிவம் : வேரின் மையப்பகுதி பருத்தும், இரு முனைப்பகுதியும் படிப்படியாகக் குறுகி, கதிர் போன்ற வடிவத்தில் காணப்படும். எ.கா. முள்ளங்கி.

(iii) பம்பர வடிவம் : வேரின் மேல் பகுதி மிக அகன்றும், நுனி திடீரென்று வால் போல நீண்டும் குறுகியும் காணப்படும். எ.கா. பீட்ருட், டர்னிப்



வேற்றிட வேரின் மாற்றுரு :
1. சேமிப்பு வேர்கள் :
(i) வேர்க்கிழங்குகள் : சில வேற்றிட வேர்கள் உணவைச் சேமித்து வைத்து, பருத்து, குறிப்பிட்ட வடிவம் இல்லாமல் இருக்கும். எ.கா. சர்க்கரைவள்ளிக் கிழங்கு

(ii) கொத்து வேர்கள் : தண்டின் அடிப்பகுதியில் பருத்த வேர்கிழங்குகள் கொத்து கொத்தாகக் காணப்படும். எ.கா. டாலியா.

2. தாங்கு வேர்கள் :
(i) தூண் வேர்கள் : மரத்தின் கிளைகளில் இருந்து வேர்கள் தோன்றுகின்றன. இவ்வேர்கள் பூமியை நோக்கிச் செங்குத்தாக வளர்ந்து மண்ணில் ஊன்றுகின்றன. சிறிதுசிறிதாக இவை தடிமனாகித் தூண்களைப் போல மரத்தைத் தாங்குகின்றன இவ்வேர்களே தூண்வேர்கள் எனப்படும்.
எ.கா. ஆலமரம்.

(ii) முண்டு வேர்கள் : சில தாவரங்களில், மெலிந்த தண்டின் அடிப்பகுதியில் கணுக்களிலிருந்து சிறிய தடிமனான வேர்கள் தோன்றுகின்றன. இவை சாய்வாகத் தரையை நோக்கி வளர்ந்து தாவரத்துக்குக் கூடுதல் ஆதாரத்தைத் தருகிறது. இந்த வேர்கள் முண்டு வேர்கள் எனப்படும்.
எ.கா. சோளம், கரும்பு.


3. தொற்றுவேர்கள் :
 சில தாவரங்கள் வேறு மரங்களின் கிளைகளில் வளர் பவை. இவை உணவிற்காக அன்றி இருப்பிடத்திற்காக மட்டுமே சார்ந்து இருக்கும். இத்தாவரங்களின் வேர்கள் காற்றில் அசைந்தாடும். காற்றிலுள்ள ஈரப்பதத்தை வேரில் உள்ள வெலாமன் திசு உறிஞ்சுகிறது. இவ்வகை வேர்கள் தொற்றுவேர்கள் எனப்படும். எ.கா. வாண்டா (ஆர்கிட்)

4.ஒட்டுண்ணி வேர் :
 சில ஒட்டுண்ணித் தாவரங்கள், ஓம்புயிரித் தாவரத்தின் திசுக்களில் வேர்களை உள்ளே நுழைத்து உணவை உறிஞ்சுகின்றன. இவ்வேர்கள் ஒட்டுண்ணி வேர்கள் எனப்படும். எ.கா. கஸ்குட்டா.


Thursday, 2 November 2023

தாவரத்தின் அமைப்பு மற்றும் செயல்கள்-2 -தண்டு தொகுப்பு-இலை


தாவரத்தின் அமைப்பு மற்றும் செயல்கள்-2 

தண்டு தொகுப்பு

மண்ணிற்கு மேற்பகுதியில் உள்ள அனைத்தும் தண்டு தொகுப்பு என அழைக்கிறோம். இதனுடைய மைய அச்சு தண்டு ஆகும்.

தண்டு பகுதியில் கணுக்களும் கனுவிடை பகுதிகளும் உள்ளன.

 

கணு என்பது தண்டின் இலைகள் தோன்றும் பகுதி கணு எனப்படும்.

 

கணுவிடை பகுதி என்பது இரண்டு கணுக்களுக்கு இடையே உள்ள பகுதி ஆகும்.

 

இலைகோணம் என்பது இலையின் அடிப்பகுதிக்கும் தண்டிக்கும் இடையே உள்ள கோணம் இலைக்கோணம்.

 

 

தண்டின் வேலை:

கிளைகள் இலைகள் மலர்கள் மற்றும் கனிகளை தண்டுகள் தாங்குகின்றன.

 

வேரினால் உறிஞ்ச பட்ட நீர் மற்றும் கனிமங்கள் தண்டின் வழியாக தாவரத்தின் மற்ற பாகங்களுக்கு கடத்தப்படுகின்றன.

 

இலைகளில் தயாரிக்கப்படும் உணவு தண்டின் வழியாக தாவரத்தின் பிறப்பாக உங்களுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.

 

சில தாவரங்கள் உணவை தண்டுப் பகுதியில் சேமித்து வைக்கின்றன எடுத்துக்காட்டு: கரும்பு

 

இலை

 

தண்டின் கனவின் மேல் விரிந்த தட்டையான பசுமை நிறத்தில் தோன்றும் புற அமைப்பு இலையாகும்.

இலையில் உள்ள பகுதிகள் இலைக்காம்பு 

இலை பரப்பு

 மைய நரம்பு 

இலை அடி பகுதி 

இலை அடி செதில் 

பச்சையம் 

இலை துகள்கள்

 இணைக்காம்பு என்பது தண்டு மற்றும் இலையை இணைக்கும் காம்பு பகுதி.

 பசுமையான தட்டையான பகுதிக்கு இலைத்தாள் அல்லது இலை பரப்பு.

 இலையினுடைய மையத்தில் உள்ள நரம்பிற்கு மைய நரம்பு.

 தண்டு அல்லது கிளையுடன் இணைக்கப்பட்டுள்ள இலையின் பகுதி இலையடி பகுதி எனப்படும்.

 

ஒருசில இலைகளின்  அடிப்பகுதியில் இரண்டு சிறிய பக்கவாட்டு வளரிகள் உள்ளன. அவற்றிற்கு இலையடி செதில்கள் எனப்படும்.

 

இலைகள் பச்சை நிறத்தில் இருப்பதற்கான காரணம் அவற்றில் உள்ள பச்சை நிறமிகளான பச்சையமாகும்.

 

இலைகளின் அடிப்பகுதியில் உள்ள நுண்ணிய துளைகள் இலைத்துணைகள் எனப்படும்.

 

இலையின் வேலை:

ஒளிச்சேர்க்கை மூலம் உணவை தயாரிக்கவும், சுவாசித்தலுக்கும், இலை துளைகள் வழியே நீராவி போக்கு நடைபெறுகிறது.

 

விக்டோரியா அமேசோனிகா என்ற தாவரத்தின் இலை மூன்று மீட்டர் விட்டமும், நன்கு வளர்ச்சி அடைந்த இலையின் மேற்பரப்பு 45 கிலோ கிராம் எடை கொண்டது.

 

தாவரங்களை பூவின் அடிப்படையில் இரண்டு வகைகளாக பிரிக்கலாம் பூக்கும் தாவரங்கள் எடுத்துக்காட்டு சூரியகாந்தி மற்றும் பூவா தாவரங்கள் எடுத்துக்காட்டு ரிக்ஸியா

 

தாவரங்களை விதை அமைந்திருக்கும் அடிப்படையில் இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

 

ஆஞ்சியோஸ்பெர்ம்கள்- (மூடிய விதை தாவரங்கள் -விதைகள் கனிகளில் புதைந்திருக்கும்) எடுத்துக்காட்டு மா

ஜிம்னோஸ்பெர்ம்கள்-(திறந்த விதை தாவரங்கள் -விதைகள் கனிகளில் புதைந்து இருக்காது) எடுத்துக்காட்டு சைகஸ்

 

மனித இரத்தம்

  மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் .  இரத்தத்தின்  பகுதிப்  பொருள்கள்  இரத்தம்  ...