Tuesday, 6 June 2023

பாரத தாய் ஏழையா???

பாரத தாய் ஏழையா???  

இந்தியா முழுவதும் சுதந்திரப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில்  பாரதியாரும் அவரது மாணவர் பாரதிதாசனும் பேசிக் கொண்டிருந்த போது  பாரதத் தாய்க்கு ஒரு சிலை செய்ய வேண்டும் என்ற அவரது விருப்பத்தை பாரதிதாசனிடம் கூறியிருக்கிறார் பாரதியார்.

 பாரதிதாசனும் ஒரு சிற்பியை வரவழைத்து பாரதத் தாய்க்கு சிலை செய்ய சொன்னார்.  சிற்பி சிலை தயாரிக்கத் தொடங்கியபோதே அவருக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. சிலையை ஏழ்மையாக இருப்பது போல் எளிமையாகச் செய்வதா? அல்லது ஆடை ஆபரணங்களுடன் வசதியாக இருக்கும்படி செய்வதா? என்று கேட்டார் சிற்பி. 

இதைக் கேட்ட பாரதிக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. “என் பாரதத் தாயை ஏழை என்று எப்படிச் சொல்லலாம்? எல்லாச் செல்வங்களும், வளங்களும் என் பாரதத்தாய்க்கு இருக்கத்தானே செய்கின்றன. தங்கம், வைரம், நெல், கோதுமை இவையெல்லாம் எங்கள் நாட்டில் விளையவே இல்லையா? என்றுமே வற்றாத ஜீவநதிகளும், ஆறுகளும் ஓடத்தானே செய்கின்றன. எனவே, என் பாரதத் தாயை மிகுந்த செல்வச் செழிப்போடும், ஆடை, ஆபரணங்களோடும் இருப்பது போலச் செய்யுங்கள்” என்றார் பாரதியார் . 

இன்று நாம் காணும் பாரதத் தாய் பாரதியின் விருப்பப்படியே ஆடை, ஆபரணங்களோடு வடிவமைக்கப்பட்டுக் காட்சி தருகிறாள். அனால் ஏழை ஏழையாகவே இருக்கின்றனர்..நாடு சுதந்திரமடைந்து 76 ஆண்டுகள் கடந்த நிலையிலும்.......பாரதியாரின் இந்த கவிதை வரிகளை நெஞ்சில் நிறுத்திக்கொள்ளுங்கள்..


வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி

மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்

பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.


சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்.


வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்

வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,

எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே

எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.


முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,

மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,

நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே

நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே.


சிந்து நதியின்மிசை நிலவினி லே

சேர நன்னாட்டிளம் பெண்களுட னே

சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்

தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.


கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்

சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு

சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.


காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்

ராசபுத் தானத்து வீரர் தமக்கு

நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.


பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்

பண்ணி மலைகளென வீதி குவிப்போம்

கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்

காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்


ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்

ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்

ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்

உண்மைகள்சொல்வோம்பல வண்மைகள் செய்வோம்.


குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்

கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்

நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்

ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்


மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்

வானையளப் போம்கடல் மீனையளப்போம்

சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்

சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்.


காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்

கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்

ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்

உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே

தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்

நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்

நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்.


No comments:

Post a Comment

மனித இரத்தம்

  மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் .  இரத்தத்தின்  பகுதிப்  பொருள்கள்  இரத்தம்  ...