மயக்கமா? கலக்கமா?
UPSC,TNPSC,TNUSRB,TRB, SSC,RAILWAY தேர்வுகளுக்கும் அனைத்து பாடங்களும் எளிய முறையில் shortcut முறையில் இந்த Telegram : https://t.me/bodhiiasacademy வாயிலாக இலவச வகுப்புகள் நடைபெற்று வருகிறது... இலவச வகுப்பில் இன்றே இணைந்து கொள்ளுங்கள்..தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். மேலும் இலவச வகுப்புகளுக்கு... தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்...9750391313
Wednesday, 19 July 2023
மயக்கமா? கலக்கமா?
Monday, 17 July 2023
ஒருவர் நல்லவரா கெட்டவரா ,தகுதியானவரா, நேர்மையானவரா, யோக்கியரா, அறமும் ஒழுக்கமும் பேணுபவரா , அல்லது அயோக்கியரா என்பது எப்படித் தெரியும்?
"
ஒருவர் நல்லவரா கெட்டவரா ,தகுதியானவரா, நேர்மையானவரா, யோக்கியரா, அறமும் ஒழுக்கமும் பேணுபவரா , அல்லது அயோக்கியரா என்பது எப்படித் தெரியும்? அவரது எச்சத்தால் காணப்படும் என்கிறார் திருவள்ளுவர். எச்சம் என்றால் என்ன ???
பறவைகள் கழிக்கும் மலத்தை எச்சம் என்போம். மானுடனின் எச்சம் என்பது அதுவல்ல. வாழ்ந்து மறைந்தபின்பு விட்டுச்செல்லும் பெருமைகள் அல்லது சிறுமைகள். அவர்களின் வாரிசுகள் என்று கூறலாம்."
அவர்களின் வாரிசுகள் எந்த தன்மை வாய்ந்து இருக்கிறதோ அதுவே ஒருவரின் எச்சம் ஆகும் ..
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்’
இந்த திருக்குறளுக்கு உதாரணம் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களின் வாழ்வில் ஒரு உண்மைச் சம்பவத்தை இன்று தற்செயலாக படித்தேன் ..
அப்துல் கலாமின் வார்த்தைகளில் ,
அவரது இளமைக்கால வாழ்க்கை :
"நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்...
என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம்...
சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன் , என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய் ..... ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்....
‘ இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனது ’ என்று என் தந்தை என்னிடம் கேட்டார்.
நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரியவில்லை ..
என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என் தாய்...
ஆனால் அதற்கு என் தந்தையோ .."எனக்கு கருகிய ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும் " என்று பதில் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது ....
சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்... நான் மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு , அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன் :
" அப்பா ... உங்களுக்கு உண்மையாகவே கருகிய ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?"
சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை , என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சொன்னார்....
" மகனே...உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு , நமக்கும் பணிவிடை செய்கிறார் ..
களைத்துப் போய் இருப்பார் ...
ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ...
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்...
நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...
இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ....
நடப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான மனநிலைக்கு நாம் மாறுவதே ....”
குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அய்யா அவர்களின் தந்தை ஜைனுலாப்தீன் விட்டு சென்ற எச்சம் தான் நாடு போற்றும் ஏவுகணை நாயகனை இந்தியாவிற்கு தந்தந்து ...
நன்றி ...அடுத்த பதிவில் சந்திப்போம்
Tuesday, 11 July 2023
திருஞானசம்பந்தர்
திருஞானசம்பந்தர்
·
இயற்பெயர் = ஆளுடையபிள்ளை
·
பெற்றோர் = சிவபாத இருதயார், பகவதி
அம்மையார்
·
ஊர் = சீர்காழி(தோணிபுரம், பிரம்மபுரம், வேணுபுரம்)
·
மார்க்கம் = கிரியை என்னும் சத்புத்திர மார்க்கம்
·
நெறி = மகன்மை நெறி
·
ஆட்கொள்ளட்பாட இடம்
= சீர்காழி
·
இறைவனடி சேர்ந்த இடம்
= பெருமணநல்லூர்
·
இவரின் தமிழ் = கொஞ்சு தமிழ்
·
மனைவி = சொக்கியார்
·
வாழ்ந்த காலம் = 16 ஆண்டுகள்
படைப்புகள்:
·
முதல் மூன்று திருமுறைகள் =”திருகடைகாப்பு”
எனப் போற்றுவர்
·
1,2,3 ஆம்
திருமுறைகள்
வேறு பெயர்கள்:
·
ஆளுடையபிள்ளை(இயற்பெயர்)
·
காழிநாடுடைய பிள்ளை
·
ஆணைநமதென்ற பெருமான்
·
பரசமயகோளரி
·
திராவிட சிசு(ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தர்யலகரி
என்னும் நூலில்)
·
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்
ஞானசம்பந்தம் (சுந்தரர்)
·
இன்தமிழ் ஏசுநாதர்
·
சத்புத்திரன்
·
காழி வள்ளல்
அற்புதங்கள்:
·
மதுரை = தான் தங்கியிருந்தமடத்திற்குக் கூன்பாண்டியன் வைத்த நெருப்பை அவனுக்கே வெப்பு நோயாகப்பற்றச் செய்தார். அவன் மனைவி மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் வேண்ட, நீறு பூசி அவனின் வெப்பு நோய் நீக்கி, அவனின் கூன் நீக்கச் செய்து அவனை “நின்றசீர்நெடுமாறன்” ஆகினார்.
·
திருமறைக்காடு = மூடிய கோயில் கதவுகளைபாடித் திறக்க செய்தார்.
·
திருப்பாச்சிலாச்சிரமம் = மழவன் மகளின் முயலகன் நோய் நீக்கினார்
·
திருமருகல் = பாம்பு தீண்டியவணிகனின் விடம் நீக்கினார்
· திருவோத்தூர் = ஆண்பனையைபெண்பனைஆக்கினார்
மூன்று வயதில் இவருக்கு உமையம்மையே நேரில் வந்து இவருக்கு “ஞானப்பால்” ஊட்டினார். அன்று முதல் இவர் “ஞானசம்பந்தன்” எனப் பெயர் பெற்றார்.
- மதுரையில் அனல்வாதம், புனல்வாதம் செய்து சமணர்களை தோற்கடித்தார். தோல்வி தாங்காமல் 8000 சமணமுனிவர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர்.
- இவரின் தோழர் = பரஞ்சோதியார்
- ஞானசம்பந்தர் 16000 பதிகம் பாடியதாகநம்பியாண்டார் நம்பி குறிப்பிடுகிறார். ஆனால் நமக்கு கிடைத்தது 384 பதிகங்கள் மட்டுமே.
- கிடைக்கும் மொத்தப்பாடல்கள் = 4181
- சம்பந்தரும் நாவுக்கரசரும் சந்தித்த இடம் = திருப்புகலூர்
- சேக்கிழார் பெரியபுராணத்தில் ஏறக்குறைய பாதிக்கு பாதி சம்பந்தர் வரலாறு இடம் பெறுவதால் “பிள்ளை பாதி புராணம் பாதி” எனப்போற்றப்படுகிறது.
மேற்கோள்:
·
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதனாம நமச்சிவாயமே
மனித இரத்தம்
மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் . இரத்தத்தின் பகுதிப் பொருள்கள் இரத்தம் ...
-
எப்படி படிக்க வேண்டும்??? 'படி' என்று சொன்னாலே நாம் நினைப்பது மனப்பாடம் செய்து படிக்க வேண்டும் என்றுதான் ஆனால் பாரதிதாசன் அவர்கள் ...
-
மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் . இரத்தத்தின் பகுதிப் பொருள்கள் இரத்தம் ...
-
Academics of Athens அரிஸ்டாட்டில் கிரேக்க நாட்டில் கி.மு.384 ஆம் ஆண்டு பிறந்தார் . அரிஸ்டாட்டிலின் தந்தை கிர...


