Today Current Affairs– 06th November 2023
International Current Affairs
புலாவா ஏவுகணை (Bulava Missile)
அணுசக்தி நீர்மூழ்கி போர் கப்பலான அலெக்சாண்டர்-3 நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான புலாவா ஏவுகணையை (Bulava Missile) ரஷ்யா ஏவி சோதனை செய்துள்ளது.
National Current Affairs
எல்லையில்பாதுகாப்பிற்காக தேனீக்கள்
- இந்திய எல்லை பாதுகாப்பு படையானது (BSF) மேற்கு வங்கத்தில் இந்திய-வங்கதேச எல்லையில்பாதுகாப்பிற்காக தேனீக்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
- ஒரே நாடு ஒரே பதிவு என்ற பெயரில் தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மருத்துவர்களுக்காக தனி அடையாள எண் வழங்க உள்ளது.
- நவம்பர் 07-ல் முதற்கட்டமாக மிஸேராமில் 40 பேரவைத் தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் 20 பேரவை தொகுதிகளுக்கும் தேர்தலினை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
- குஜராத்தின் காந்திநகரில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான முதல் கல்வி மற்றும் திறன் கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.
- 2023-ஆம் ஆண்டிற்கான உலகாளவிய பொறுப்பு சுற்றுலா விருதினை கேரளவில் மாநிலம் பெற்றுள்ளது.
Sports Current Affairs
49வது சதம்
- உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான விராட்கோலி தனது 49வது சதம் அடித்துள்ளார்
- 49 சதங்களை விளாசிய சச்சின் டெண்டுல்கர் (452) சாதனையை 277 இன்னிங்ஸில் சமன் செய்துள்ளார்.
FIDE கிராண்ட் ஸ்வீஸ் செஸ்
- பிரிட்டனில் நடைபெற்று வரும் FIDE கிராண்ட் ஸ்வீஸ் செஸ் தொடரில் மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனையான வைஷாலி சாம்பியன் பட்டத்தினை தட்டிச் சென்றுள்ளார்.
7வது முறையாக சாம்பியன்
- பிரான்ஸில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவல் நோவக் ஜோகோவிச் 7வது முறையாக சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.
- மேலும் இவரது 40-வது மாஸ்டர்ஸ் பட்டமாகும்.

No comments:
Post a Comment