தாவரத்தின் அமைப்பு மற்றும் செயல்கள்-1
பூக்கும் தாவரங்கள் இரண்டு முக்கிய தொகுப்புகளை கொண்டுள்ளன.
வேர் தொகுப்பு
தண்டு தொகுப்பு
வேர் தொகுப்பு:
வேர் என்பது ஒரு தாவரத்தின் முக்கிய அச்சின் கீழ் பகுதியாகவும். வேர்களில் கணுக்களும் கணுவிடை பகுதிகளும் கிடையாது. வேர் நுனியில் வேர்முடி உள்ளது. .
வேர்கள் நேர் புவி நாட்டம் உடையவை.
தாவரங்களின் வேர்கள் 2 வகைப்படும்
ஆணிவேர் தொகுப்பு
சல்லி வேர் தொகுப்பு
ஆணிவேர் தொகுப்பு என்பது விதையிலிருந்து முளைவேர் தொடர்ந்து வளர்ந்து ஆணிவேரை உண்டாக்குகின்றன. முளைவேர் தடித்த முதல் நிலை வேராக வளர்கிறது. இதிலிருந்து துணை வேர்களான இரண்டாம் நிலை வேர்கள் தோன்றுகின்றன.
ஆணிவேர் தொகுப்பு பொதுவாக இருவித்திலை தாவரங்களில் காணப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக: வேம்பு, மாமரம்
சல்லி வேர் தொகுப்பு
சல்லிவேர் தொகுப்பு என்பது பெரும்பாலும் ஒருவித்தலை தாவரங்களில் காணப்படுகின்றன. அதாவது முதல் நிலை வேர் சிறிது காலத்தில் அழிந்து தண்டின் அடிப்பகுதியில் சம பருமன் உள்ள வேர்கள் கொத்தாக தோன்றி வளர்கிறது.
எடுத்துக்காட்டு :புல், மக்காச்சோளம்
வேரின் வேலைகள்:
தாவரத்தை வேர்கள் பூமியில் நிலை நிறுத்தவும், மண்ணிலிருந்து தாவரங்களுக்கு தேவையான நீரையும் கனிம சத்துக்களையும் உறிஞ்சுவதற்கும், வேர்களில் தங்களின் உணவை சேமிக்கவும் உதவுகின்றன.
இஞ்சி என்பது தண்டா ?வேரா?
இஞ்சி பகுதி தண்டு பகுதி ஆகும்.
No comments:
Post a Comment