Friday, 3 November 2023

இலையின் மாற்றுரு - தண்டின் மாற்றுரு -

 

இலையின் மாற்றுரு - தண்டின் மாற்றுரு :

சில தாவரங்களில் இலைகள் கொடுக்கப்பட்டுள்ளதைப் போன்று மாற்றுரு அடைந்துள்ளன.
1. இலைப் பற்றுக்கம்பி : சில தாவரங்களில், இலை நலிந்த சுருள்கம்பி போன்று - அமைந்து பற்றி ஏற உதவும் பற்றுக் கம்பியாக மாறுபாடு அடைந்து இருக்கும். எ.கா. பட்டாணி.

2. குடுவைத் தாவரம் : சில தாவரங்களில் நைட்ரஜன் பற்றாக்குறையை ஈடுசெய்ய இலை முழுமையாக மாறுபாடு அடைந்து பூச்சியைப் பிடிக்க ஏதுவாகக் குடுவை வடிவத்தில் இருக்கும். எ.கா. நெப்பன்ந்த ஸ்.

3. இலைமுட்கள் : சப்பாத்திக்கள்ளியில் இலைகள் மேற்புறத்தில் முழுமையாக - முட்களாக மாறியுள்ளன. இம்முட்கள் நீராவிப் போக்கைக் குறைக்கின்றது. எ.கா. சப்பாத்திக்கள்ளி


4. பை : யூட்ரிகுலேரியா தாவரத்தில் சில இலை பூச்சியைப் பிடிக்க ஏதுவாகப் பை போன்ற அமைப்பாக மாறியுள்ளன.

தண்டின் மாற்றுரு :

 தண்டின் இயல்பான பணிகளைத் தவிர, தாவரங்கள் சிலவற்றில் தண்டுகள் சிறப்பான பணிகளைச் செய்கின்றன. இத்தாவரங்களில், தண்டின் ஒரு பகுதியோ முழுவதுமாகவோ அப்பணியைச் செய்வதற்கென மாறுபாடு அடைந்துள்ளன. அத்தண்டுகள் மாற்றுரு அடைந்த தண்டுகள் எனப்படும்.
1. தரைகீழ்த் தண்டு மாற்றுரு :
* சில தாவரங்களின் தண்டுகள் தரைகீழ்த் தண்டுகளை உருவாக்குகின்றன. இவை உணவைச் சேமிக்கின்றன. இவை பல வகைப்படும்.

(i) கிழங்கு : தரைகீழ்த் தண்டுகளின் பருத்த நுனிப்பகுதியே கிழங்கு எனப்படும். அதிக உணவைச் சேமித்து வைக்கின்றன. எ.கா. உருளைக்கிழங்கு

(ii) மட்டநிலத் தண்டு : இவை தடித்த கிடைமட்டமான தரைகீழ்த் தண்டு. - எ.கா. இஞ்சி.

2. தரைமேல் மாற்றுரு :
பொதுவாக மொட்டுகள் கிளைகளாகவோ மலர்களாகவோ வளர்ச்சியடையும். சில தாவரங்களில் மொட்டுகள் சில குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்காக மாறுபாடு அடைந்துள்ளன. அவை
(i) தண்டு பற்றுக்கம்பிகள் : சில தாவரங்களில், கோண மொட்டு பற்றுக்கம்பியாக மாறுபாடு அடைந்து இருக்கும். இவை ஆதாரத்தைப் பற்றிக்கொள்ள - உதவுகின்றன.
எ.கா. புடலங்காய்.

(ii) முட்க ள் : சில தாவரங்களில், கோண மொட்டு முட்களாக மாறுபாடு - அடைந்து இருக்கும்.
எ.கா. காகிதப்பூ

(iii) இலைத்தொழில் தண்டு : சில வறண்ட நிலத் தாவரங்களில், இலைகள் முட்களாக மாறியுள்ளன. தண்டு தட்டையாக இலை போல மாறி இலையின் பணியைச் செய்கின்றது. இத்தண்டே இலைத்தொழில் தண்டு எனப்படும்.
எ.கா. சப்பாத்திக்கள்ளி.

 3.தரை ஒட்டிய தண்டு மாற்றுரு :
உடல இனப்பெருக்கத்திற்காக இவை மாற்று அடைந்துள்ளன. சில தாவரங்களில் தண்டு நலிந்தவை. இவை தரையில் கிடைமட்டமாக அல்லது தரையின் மேற்பரப்பில் புதைந்தும் காணப்படும். கணுக்களில் இருந்து தரையொட்டி கிளைகளும், அடிப்பகுதியில் வேற்றிட வேர்களும் தோன்றுகின்றன. இவை படர்கொடி எனப்படும். படர்கொடிகள் இரண்டு வகைப்படும்.
(i) ஓடு தண்டு -எ.கா. புல், பூசணி
(ii) ஸ்டோலன்- எ.கா. ஸ்ட்ராபெர்ரி

அமேசான் அல்லி தாவரத்தின் இலையின் விட்டம் 7அடி. அதன் மலர் 12 முதல் 16 அங்குலம் உடையது.

No comments:

Post a Comment

மனித இரத்தம்

  மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் .  இரத்தத்தின்  பகுதிப்  பொருள்கள்  இரத்தம்  ...