Daily Current Affairs - 26.10.2023
Tamilnadu Current Affairs
1. நவம்பர் 4 முதல் தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களிலும் ஹெத்வாக் என்னும் ஆரோக்கிய நடைபயணத் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
National Current Affairs
இந்தியா – பாரத்
NSTC-ன் குழுவின் தலைவரான ஐசக் பரிந்துரையின் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) உள்ளிட்ட கல்வி வாரியங்கள் பின்பற்றி வரும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) பள்ளி பாட புத்தகத்தகங்களில் இந்தியா என்ற பெயர் பாரத் என மாற்றப்பட உள்ளது.
தேசிய கல்விக் கொள்கை (NEB 2020) அடிப்படையில் பாடங்களில் மாற்றம் கொண்ட வர 19 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்றல்-கற்பித்தல் திட்ட தயாரிப்பு குழு (NSTC) உருவாக்கப்பட்டுள்ளது.
NCERT – National Council of Educational Research and Training – 1961
வாழ்விட உரிமை
வனஉரிமைச்சட்டம் 2006-ன் சதிஸ்கரின் பைகா பழங்குடியினருக்கு (Baiga Tribes) வாழ்விட உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பைகா (சத்திஸ்கர்), கமர் (சத்திஸ்கர்), பாயா (மத்தியபிரதேசம்) போன்ற பழங்குடியினருக்கு மட்டுமே வாழ்விட உரிமை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பழங்குடி விழா
குஜராத், அகமதபாத் நகரில் நடைபெறும் தேசிய பழங்குடி விழாவினை (National Tribal Festival) பழங்குடியின அமைச்சர் அர்ஜீன் முண்டா தொடங்கி வைத்துள்ளார்.
பழங்குடியின கெளரவ தினம் (Tribal Pride Day) – நவம்பர் 15
ஐசார்ட் டேலன்ட் கனெக்ட் போர்டல்
ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை தேடுபவர்களுக்காக ஐசார்ட் டேலன்ட் கனெக்ட் போர்டலானது (iStart Talent Connect Portal) துவங்கப்பட்டுள்ளது
ரோப்கார் சேவை
முசோரி-டேராடூன் இடையே இந்தியாவின் மிக நீளமான ரோப் கார் சேவையானது (Rope car service) தொடங்கப்பட உள்ளது.
விருதுகள்
இந்திய வம்சாளியைச் சேர்ந்த அசோக் காட்கிலுக்கு (Ashok Gadgil) தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான தேசிய பதக்கம் புதுமைக்கான தேசிய விருதும், சுப்ரா சுரேஷ்க்கு (Supra Suresh) தேசிய அறிவியல் பதக்கமும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் விருதுகளை வழங்கியுள்ளார்.
Sports News
அதிவேக சதம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதம் அடித்து உலககோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதம் அடித்த சாதனை நபர் என்ற சாதனையை புரிந்துள்ளார்.
No comments:
Post a Comment