BODHI IAS ACADEMY
General Tamil wise Topics Syllabus
பகுதி – (ஆ) – இலக்கியம் - ஐஞ்சிறு காப்பியங்கள் - நீலகேசி
·
நீலகேசி என்பது “கேசி” என்று முடியும் பெண்பால் பெயர்களுள் ஒன்று. கேசி அழகிய கூந்தலை உடையவள். நீலகேசி – அழகிய கருங்கூந்தலை உடையவன் என்பது பொருள்.
- நீலகேசி சமணர்களால் இயற்றப்பட்டது.
- இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
- 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது
- விருத்தப்பாவால் ஆனது.
- நீலகேசி என்னும் சமணப் பெண்துறவி பல சமயத்தாரோடு வாதிட்டு வெற்றி வாகை சூடுவதைப் பற்றி கூறும் நூல்.
- குண்டலகேசிக்கு எதிர்ப்பு நூல்
- தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல்.
- கடவுள் வாழ்த்து பாடல் உட்பட 894 பாடல்கள் உள்ளன.
பத்துச் சருக்ககங்களை கொண்டது.
- தருமவுரைச் சருக்கம், குண்டலகேசி வாதச்சருக்கம், அருக்கசந்திரவாதச் சருக்கம், மொக்கலவாதச் சருக்கம், சாங்கிய வாதச் சருக்கம், பூதவாதச் சருக்கம், வைசேடிகவாதச் சருக்கம், வேதவாதச் சருக்கம் என்னம் பத்து வாதச் சருக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
- சிவஞானசித்தியார் பரபக்கம், பிரபோத சந்திரோதயம் முதலிய நூல்களுக்கு இந்நூல் முன்னோடியாகும்.
- பழையனூர் நீலி கதை இக்காப்பியத்தில் வருகிறது.
No comments:
Post a Comment