காவலர் to IAS அதிகாரி???
2022 ஆம் ஆண்டு நடைப்பெற்ற upsc தேர்வுக்கான முடிவு வெளிவந்துள்ளது. முதல் 4 இடங்களை பெற்று பெண்கள் பெருமை சேர்த்துள்ளனர்...
அகில இந்திய அளவில் முதல் 100 இடங்களுக்குள் தமிழக மாணவர்கள் இடம்பெறவில்லை என்பது சற்று வருத்தம் தந்தாலும் எந்தவித பின்புலமும் இல்லாமல் upsc தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருமே பாராட்டுதலுக்கு உரியவர்கள் ...
அதிலும் வேலையில் இருந்துக்கொண்டே படித்து தேர்ச்சி பெற்ற ஒருவரை பற்றிய பதிவுதான் இது..
ராஜஸ்தானைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகனான ராம் பஜன் குமார், கடந்த 2009-ம் ஆண்டு காவல்துறையில் சாதரண கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தார் . அதன் பின்னர் பதவி உயர்வு பெற்று தலைமைக் காவலர் ஆனார்.
இதனிடையே தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை upsc தேர்வுக்காக இவர் தொடர்ந்து படித்து வந்துள்ளார். காவல்துறையில் பணியாற்றி கொண்டே கிடைக்கும் நேரங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வுக்காக விடாமுயற்சியுடன் படித்து தற்போது தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
இதுவே ஆக சிறந்த வெற்றி ... படிக்க நேரம் போதவில்லை என கூறி கொண்டே செல்பேசியில் முழுகி இருக்கும் நம் வீட்டு பிள்ளைகளுக்கு கூறுங்கள் இவரது வெற்றியை...

No comments:
Post a Comment