உன் பெயர் என்ன??ஆசாத்
உன் தந்தைப் பெயர் என்ன??சுதந்திரம்
உன் முகவரி என்ன??" சிறை"
அந்த கோர நிகழ்வு 1919ல் நடந்த 'ஜாலியன் வாலாபாக் படுகொலை என்னும் பெயரில் நிகழ்ந்து.. இந்தியாவின் அம்ரித்சர் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு 'ரெஜினால்ட் டையர் ' என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது.
இந்த தாக்குதல் வெள்ளையர் ஆட்சி மீது சந்திரசேகர சீதாராம் திவாரிக்கு வெறுப்புணர்வை அதிகரித்தது. பிறகு, ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குகொண்டு தன்னுடைய 15 வயதில் கைது செய்யப்பட்டு குற்றவியல் நீதிபதியிடம் கொண்டு செல்லப்பட்டார்.
நீதிபதி சந்திரசேகர சீதாராம் திவாரியிடம் உன் பெயர் என்ன என்று கேட்க "ஆசாத் என்று கூற (ஆசாத் என்றால் விடுதலை), தந்தைப் பெயர் என்ன என்று கேட்க சுதந்திரம் என்றார் உன் முகவரி என்ன என்று கேட்டபொழுது " சிறை" என்றார். இதனால், கோபமுற்றநடுவர், சந்திரசேகரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி..மேலும்்கடுப்பான நீதிபதி
15 பிரம்படி கொடுக்கவும் உத்தரவிட்டார். தண்டனையை வீரமுடன் ஏற்ற அவர், ஒவ்வொரு பிரம்படிக்கும் "பாரத்மாதாகீஜே" என குரலெழுப்பி பாரத நாட்டின் மீது கொண்ட சுதந்திரப் பற்றை வெளிபடுத்தினார்.
அன்று முதல், அவர் 'சந்திரசேகர ஆசாத்' என அழைக்கப்பட்டார்.
பகவத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோரின் பின்னனயில் இருந்து அவர்களை வழிநடத்தியவரும் இவரே. 1931 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் நாள் அலகாபாத்திலுள்ள "அல்ப்ரெட்" பூங்காவில் தன்னுடைய இயக்கத்தாருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது ஆங்கில அரசால் சுற்றி வளைக்கப்பட்ட அந்த சிங்கம்
நீண்ட நேரம் ஆங்கில காவல்துறையினரிடம் போராடியது காலில் குண்டடிபட்டு தப்பி செல்ல முடியாமல், துப்பாக்கியில் ஒரே ஒரு தோட்டா மீதம் இருந்த நிலையில், அவர்களிடம் சிக்கி விடகூடாது என நினைத்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். சந்திரசேகர ஆசாத் மறைந்துவிட்டாலும் அவர்விட்டு சென்ற சுவடுகள் இன்னும் மறையாமால் தான் இருக்கின்றன.

No comments:
Post a Comment