Sunday, 14 May 2023

ரியல் மாஸ்டர்??? சூரியா சென் ??

                  ரியல் மாஸ்டர்????? சூரியா சென்.........?????

சூரியா சென், வங்காள மாநில மக்கள் அவரை ‘மாஸ்டர்தா’ என்று அழைத்தனர். காரணம் பள்ளி ஆசிரியரான சூரியா சென் இப்படி இளம் மாணவர்களை கொதித்து எழ செய்ததால் ‘மாஸ்டர்தா’ என்று அழைத்ததனர்..
இந்த உலகத்திலேயே யாரும் அனுபவிக்க கூடாத ஒரு மரணத்தை ஆங்கில அரசு சூரியாசென்னுக்கு வழங்கியது . சூரியா சென்னைத் தூக்கில் இடுவதற்கு முன்பாக, அவரது ஒவ்வொரு பற்களையும் குறடால் பிடுங்கி எறிந்தனர். பின்னர் கால்கள் மற்றும் கைகளில் உள்ள அனைத்து மூட்டெலும்புகளை சுத்தியால் உடைத்தனர். உணர்விழந்த நிலையில் இருந்த சூரியா சென்னை தூக்கு மேடையில் ஏற்றி தூக்கில் தொங்க விடப்பட்டு இறந்த பிறகும் திரும்பி விடுவாரோ என்று அஞ்சி கனத்த இரும்பு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு வங்கக்கடலில் தூக்கி வீசப்பட்ட்டார் சூரியாசென்.. ஏன் இந்த கொடூரம் ஆங்கில அரசுக்கு அப்படி என்ன செய்தார் சூரியாசென் ???
ஆங்கிலேயர்கள் துப்பாக்கி, பீரங்கி கொண்டு தாக்கும்போது, கத்தி, வாள் வைத்திருக்கும் நம் பாரத தேசத்து வீரர்களால் போராடி ஜெயிக்க இயலாது என எண்ணி மிகப்பெரிய திட்டம் ஓன்று வகுக்கிகிறார் சூரியாசென்..
ஆங்கிலேயர்களின் போர் ஆயுத கிடங்கை (பெரிய படைக்கொண்ட ஆங்கிலேயர்களை) வெறும் 65 பேர் கொண்ட குழுவை அமைத்து சிட்டகாங்கில் உள்ள ராணுவ கிடங்கை கைப்பற்றினார் ..எப்படி., இவரது தலைமையிலான குழு ஒன்று முதலில் தொலைபேசி, தந்தி வசதிகளை செயலிழக்க செய்து செய்தித் தொடர்பு அமைப்புகளை முற்றிலும் அழித்து விட்டனர். இதனால் சிட்டகாங் நகரம் நாட்டின் பிற பகுதிகளுடன் செய்தித் தொடர்பு வசதிகளை இழந்தது. சூரியா சென்னின் மற்றறொரு குழுவினர் ஆயுத கிடங்கில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் ஆயுத கிடங்கை சூறையாடினர்.இந்த குழு இரண்டு ராணுவ கிடங்குகளை பிடித்துவிட்டாலும் அவற்றுக்கு தேவையான ரவை அதாவது வெடிமருந்து பொருட்களை அபகரிக்க முடியாமல் திரும்ப நேர்ந்தது. இரவு 10 மணிக்கு நடந்த அந்த திடீர் தாக்குதலில் ஒரு குழு பிடிபட்டு சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டது. மற்றொரு சிறு குழுவே வெற்றிகரமாக கிடங்கை மட்டும் பிடித்துவிட்டது. ஆனால் வெடிமருந்து பகுதியை அபகரிக்க செல்லும் போது ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் பின்தள்ளப்பட்டு, விரட்டப்பட்டனர். தன்னுடைய ஆயுதக்கிடங்கையே சூறையாடி சென்ற சூரியசென்னை எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என எண்ணி ஆங்கிலேய இராணுவம் வெறி பிடித்து தேடிக்கொண்டிருந்தது... சூரியா சென் ஆங்கிலேய காவல்துறையிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து கொண்டே இந்திய விடுதலை இயக்கத்திற்குப் புத்துணர்வு ஊட்டிக்கொண்டே இருந்தார். ஒரு நாள் அவரது உறவினரான நேத்திரா சென் என்பவரின் வீட்டில் தலைமறைவாக இருந்த போது, ஆங்கிலேய ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு பல துன்பங்களை சிறையில் அனுபவித்து தேசத்திற்ககாக போராடி தன் சுவாசத்தை நிறுத்திக்கொண்டார் சூரியா சென்...


May be an image of 1 person and text that says "சூரியா சென் சுமமா கிடைக்கவில்லை சுதந்திரம்! நெஞ்சை உ ருக்கும் வரலாறு!"

No comments:

Post a Comment

மனித இரத்தம்

  மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் .  இரத்தத்தின்  பகுதிப்  பொருள்கள்  இரத்தம்  ...