சங்கு சுட்டாலும் வெண்மை தரும் கரியாகாது ???
பால் என்பது உயர்ந்த உணவுப் பொருள். எல்லோராலும் எக்காலத்தும் விரும்பப் படுவது. அந்தப் பாலைச் சுடச் சுடக் காய்ச்சினாலும், தனது சுவையில் மேம்பட்டு விளங்கும். சுவை சிறிதும் குன்றாது. வெண்சங்கினை எவ்வளவுதான் நெருப்பில் போட்டுச் சுட்டாலும், தனது வெண்மை நிறத்தில் சிறிதும் மாறாது. மற்ற பொருள்கள் எல்லாம், நெருப்பில் இட்டால் கரியாகிப் போகும்.
இதை உணர்த்தும் "மூதுரை" பாடல் வரிகள்
அட்டாலும் பால்சுவையில் குன்றாது; அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார், நண்பு அல்லர்;
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

No comments:
Post a Comment