Sunday, 14 May 2023

மனிதர்கள் தன் நிலை மாறி (தாழ்ந்து) போனால் என்ன ஆகும்?

மனிதர்கள் தன் நிலை மாறி (தாழ்ந்து) போனால் என்ன ஆகும்???
தாமரை குளத்தில் உள்ள தாமரை நீரோடு சேர்ந்து செழிப்பாய் இருக்கும்போது, அது மலர்வதற்குத் துணை புரிந்த சூரியனே, குளத்தில் உள்ள நீர் வற்றியபோது, அந்தத் தாமரையை வாடச் செய்துவிடும் அதேப்போல காட்டில் நெருப்பு பற்றும் போது பெருநெருப்பாய் அதனை மேலும் மூளும்படித் துணை புரிவது காற்று, அந்த நெருப்புக் குறுகிச் சிறியதாய் இருக்கும்போது, அதனை அணைத்து விடுவதும் காற்றுதான் , அதேப்போல இந்தப் பரந்த உலகத்தில், மனிதர்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்திருந்த காலத்தில் அவர்களுக்கு இருந்து வந்த உறவும் நட்பும், அவர் தமது நிலையில் தாழ்ந்த போது இல்லாமல் போய்விடும். என்பதை இப்பாடலில் தெளிவாக படம் பிடித்துக்காட்டுகிறது விவேகசிந்தாமணி..
நிலை தளர்ந்திட்ட போது நீள்நிலத்து உறவும் இல்லை,
சலம் இருந்து அகன்றபோது தாமரைக்கு அருக்கன் கூற்றம்,
பல வனம் எரியும்போது பற்று தீக்கு உறவாம் காற்று,
மெலிவது விளக்கே ஆகில் மீண்டும் அக் காற்றே கூற்றம்.
May be an image of 1 person and map

No comments:

Post a Comment

மனித இரத்தம்

  மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் .  இரத்தத்தின்  பகுதிப்  பொருள்கள்  இரத்தம்  ...