வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய பாரதியார் அன்னை சிவசக்தியிடம் சுடர்மிகு அறிவுடன் பிறந்துவிட்ட என்னால் இவ்வுலகம் பயன் பெறவேண்டும். அவ்வாறு இல்லாமல் நான் பிறந்த இம்மண்ணுக்கு சுமையாக இருப்பதில் அர்த்தமில்லை.அதற்கு நான் வேண்டியபடி செயல்பட மனம் கேட்கிறேன்.அதை செயல்படுத்த உடல் வேண்டும், உயிர் வேண்டும் என் தசையினை தீச்சுடும் போதும் உன்னை பாடும் உள்ளம் வேண்டும். அதை அருள்வதில் உனக்கு என்ன தடை இருக்கிறது. இவ்வாறு எனக்கு அருளவில்லை என்றால் நல்ல வீணையை செய்து அதை தூக்கி குப்பையில் எறிவது போலாகும். என்று பின்வரும் கவிதை வரிகளில் தன்னுடைய சுதந்திர வேட்க்கையை வெளிப்படுத்துகிறார் பாரதியார்.
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ
விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ

No comments:
Post a Comment