கரிகாலனின் தோல்வி ???சேரமான் பெருஞ்சேரலாதனின் வெற்றி???
வெண்ணிக்குயத்தியார் கூறுவது என்ன???
கரிகாலன் தந்தை இளஞ்சேட்சென்னி உறையூரை
தலைநகராகக் கொண்டு
ஆண்டு வந்தார். கரிகாலன்
தாய் வயிற்றில்
இருக்கும் போதே
தந்தை இறந்துவிட்டார். பிறக்கும்
முன்பே அரசுரிமையை
பெற்றார் . சிறுவயதில்
இவன் தனக்குரிய
அரசினை இழந்து தன்
மாமனாகிய இரும்பிடர்த்தலையார்
பாதுகாப்பில் மறைந்து
வாழ்ந்தார் .
இளமைக்காலத்தில்
இவன் உறவினர்கள்
கரிகாலனை சிறையிலிட்டு
நெருப்பு வைத்தனர். இந்நெருப்பில்
இருந்து தப்பி
குறித்து ஓடியபோது
கால் கரிந்துவிடவே கரிகாலன்
என்று அழைக்கப்பட்டார்.
கரிகாலன் சோழகுலத்தை
ஒரு குறுநில
அரசிலிருந்து காஞ்சி
முதல் காவிரி
வரை பரவ
வழிவகுத்தான். சங்ககாலச்
சோழர்களில் கரிகாலனுக்கு
ஒப்பாரும் மிக்காரும்
இல்லை.
புலிக்குட்டி,
கூண்டுக்குள்ளே இருந்து
வளர்ந்தே பலம்
பெறுவது போல,
எதிரிகளின் சிறைக்கூடங்களில்
இருந்தே எதிரிகளை
வீழ்த்த பால
பாடம் கற்று
கரிகாலன் சிறையில்
இருந்த காலமெல்லாம்
சிந்தித்துச் சிந்தித்து
சிறைக்காவலரரைக் கொன்று
தப்பி, பிறகு
படிப்படியாகப் வளர்ச்சியடைந்து புகழும்
பெருமையையும் அடைந்தார்.
கரிகாலன் அரசியலில்
வேர் ஊன்றுவதற்கு
முன்னரே இவரது
அரசியல் எதிரிகள்
பல திட்ட்ங்கள்
தீட்டி சேர
பாண்டியர்கள் ஓன்று
சேர்ந்து இவரை
அழித்துவிட கோவில்வெண்ணி
என்னும் இடத்தில்
போர் தொடுத்தனர்..
அனால்,விதி
வலியது.. சோழ
அரியணையைக் கரிகாலன்
நிலையாகப் பெறுமாறு
செய்ததும், தமிழகத்தின்
முடியுடைய மூவேந்தர்க்குத்
தலைவனாக விளங்குமாறு
செய்ததும் இப்போரே.
ஏனெனில் இவ்வெற்றியின்
மூலம் தனக்கெதிராக
அமைக்கப்பட்டிருந்த ஒரு
பெரும் கூட்டணியை
கரிகாலன் முறியடித்தார்.
இப்போரில்
முதுகில் புண்பட்ட
சேரமன்னன், தனக்கு
பெரும் அவமானம்
ஏற்பட்டதாகக் கருதி, தற்கொலை
செய்து கொண்டான்.
இதை கரிகாலனின்
நண்பரும் வெண்ணியில்
வாழ்ந்து போரை
நேரில் கண்டவருமான
வெண்ணிக்குயத்தியார் தோற்றவன்
வெற்றி! பெற்றான் என்று பின்வரும் பாடலை பாடினார்.
நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கிருந்தோனே.
இந்த பாடலின் பொருள்
காற்றின் இயல்பை அறிந்து, நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை
ஓட்டிய வலியவர்களின் வழித்தோன்றலே! செருக்குடைய யானைகளையுடைய கரிகால் வளவனே! போருக்குச்
சென்று உனது வலிமை தோன்றுமாறு வெற்றி கொண்டவனே! மிகுந்த அளவில் புதிய வருவாய் உள்ள
வெண்ணி என்னும் ஊரில் நடைபெற்ற போரில், முதுகில் புண்பட்டதற்கு நாணி, வடக்கிருந்து
மிக்க புகழுடன் விண்ணுலகம் எய்திய சேரமான் பெருஞ்சேரலாதன் உன்னைவிட நல்லவன் அல்லனோ?
பெருஞ்சேரலாதனும் உன்னைப் போலப் பேரரசன்தான். போர் நடந்து
கொண்டிருக்கும்போதே மார்பில் தைத்த அம்பு முதுகிலே ஊடுருவி நுழைந்துவிட்டதனால், “ஆகா
முதுகிலே புண்பட்ட நானும் ஒரு வீரனா? எதற்காக மானமிழந்த நான் உயிர் வாழ வேண்டும்? வெற்றி
விளைந்தாலும் இனி எனக்கு அது தோல்விதான்” என்றெண்ணி வடக்கிருந்து
உயிர் துறந்தான். வெற்றி தோல்வியைவிட, ஏன்? உயிரைவிட, மானமே பெரிதாகத் தோன்றியது அவனுக்கு.
தோற்று இறந்தானில்லை அவன். தன் மானத்தைக் காப்பதற்காகத் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டான். போரில் வெற்றி பெற்றதால் நீ வெற்றிக்குரிய
புகழ் மட்டுமே அடைந்தாய். ஆனால், சேரமான் பெருஞ்சேரலாதன் உனக்கு வெற்றியை அளித்தது
மட்டுமல்லாமல், உன்னால் உண்டாகிய புண்ணுக்கு வெட்கப்பட்டு அவன் வடக்கிருந்து உயிர் துறந்து பெரும்புகழ் பெற்றான்.
ஆகவே, அவன் உன்னைவிட நல்லவன் ? என்று கூறுகிறார்.
நன்றி அடுத்தபதிவில் சந்திக்கிறேன்...
No comments:
Post a Comment