Saturday, 28 October 2023

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

 


நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

முதல்முதலில் நோபல் பரிசு வென்ற இந்தியர், நமது தேசிய கீதத்தை எழுதிய, ரவீந்திரநாத்தாகூர். இலக்கியத்திற்காக(கீதாஞ்சலி)  1913ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அவரது ஆழ்ந்த உணர்திறன், புதிய மற்றும் அழகான வரிகளின் காரணமாக, ரவீந்திரநாத் தாகூருக்கு இந்த விருது கிடைத்தது.

சிவி_ராமனுக்கு, இயற்பியல் ஆய்வு சாதனைக்காக, 1930ல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஒளி சிதறல் பிரிவு ஆய்வுக்காக சர் சி.வி.ராமன் இந்த விருதை பெற்றார்.

ஹர்_கோவிந்த்_கொரானா, மருத்துவ துறை பணிக்காக 1968ல் நோபல் பரிசு பெற்றார். மரபணு குறியீட்டின் விளக்கம் மற்றும் புரதத் தொகுப்பில் அதன் செயல்பாடு பற்றிய ஆய்வுக்காக இந்த விருது ராபர்ட் டபிள்யூ. ஹோலி மற்றும் மார்ஷல் டபிள்யூ. நிரன்பெர்க் ஆகியோருடன் ஹர்கோவிந்த் கொரானாவுக்கும் கிடைத்தது.


அமைதிக்கான நோபல் பரிசு, அன்னை தெரசாவுக்கு 1979ல் வழங்கப்பட்டது.

சுப்ரமண்யம்_சந்திரசேகர் இயற்பியல் துறைக்காக, 1983ல் நோபல் பரிசு பெற்றார். நட்சத்திரங்களின் அமைப்பு மற்றும் பரிணாம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இயற்பியல் செயல்முறைகள் குறித்த அவரது தத்துவார்த்த ஆய்வுகளுக்காக இந்த விருது கிடைத்தது.

பொருளாதார அறிவியலுக்கு வழங்கிய பங்களிப்புக்காக, 1998ல் அமர்த்தியா_சென்னுக்கு விருது வழங்கப்பட்டது.

வேதியியல் துறையில் சாதித்ததற்கு, 2009ல் வெங்கட்ராமன்_ராமகிருஷ்ணனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

அமைதிக்கான நோபல் பரிசு 2014ல் கைலாஷ்_சத்யார்த்திக்கு வழங்கப்பட்டது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குஎதிரான அடக்குமுறை தொடர்பான, செயல்பாடுகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது. பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுக்கும் அப்போது அமைதிக்கான நோபல் விருது சேர்த்தே அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

மனித இரத்தம்

  மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் .  இரத்தத்தின்  பகுதிப்  பொருள்கள்  இரத்தம்  ...