BODHI IAS ACADEMY
UPSC,TNPSC,SSC,POLICE,SI
TNPSC (General Tamil)
Topic wise Notes
பகுதி – (ஆ) – இலக்கியம் பத்துப்பாட்டு நூல்களின் சிறப்புகள்
திருமுருகாற்றுப்படை
- Ø இந்நூலின் ஆசிரியர் நக்கீரர்.
- Ø 317 அடிகளைக் கொண்டுள்ளது.
- Ø பாடப்பட்டவர் முருகப் பெருமான்.
- Ø ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெறும். திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போரால் (முருகன்) பெயர் பெற்றது.
- Ø ஏனைய ஆற்றுப்படை நூல்கள் மானிடரைத் தலைவனாகக் கொண்டிருக்க, இந்நூல் முருகனைத் தலைவனாகக் கொண்டுள்ளது. புலவராற்றுப்படை என்றும், முருகு என்றும் வழங்கப்படுகின்றது.
- Ø முருகப் பெருமானின் பெருமையைப் பேசுகின்ற இந்நூல் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய்(திருச்செந்தூர்), திருவேரகம்(சுவாமிமலை), திருவாவினன்குடி(பழனி), திருத்தணி, பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகள் சிறப்பிக்கப்படுகின்றன.
- Ø இந்நூல் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.
பொருநராற்றுப்படை
- Ø இதன் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார். 248 அடிகளைக் கொண்டது.
- Ø கரிகால் பெருவளத்தானிடம் பரிசில் பெற்ற பொருநன் ஒருவன் பரிசில் பெறக் கருதிய மற்றொரு பொருநனை அம்மன்னனிடம் ஆற்றுப்படுத்துகின்றது.
- Ø இதன் ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார்.
- Ø 269 அடிகளைக் கொண்டது. பாட்டுடைத்தலைவன் நல்லியக்கோடன்.
- Ø இந்நூல் கடை ஏழு வள்ளல்கள் பற்றி கூறுகிறது. அடி அளவால் சிறிய நூல்.
- Ø கடையெழு வள்ளல்களின் அருஞ்செயல்கள், பாட்டுடைத்தலைவனின் வீரம், கொடை, புகழ், விருந்தோம்பும் பண்பு, யாழ் வர்ணனை ஆகியன சிறப்பிக்கப்படுகின்றன.
பெரும்பாணாற்றுப்படை
- Ø இதன் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
- Ø 500 அடிகளைக் கொண்டது. பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.
- Ø இந்நூல் யாழின் வருணனை, பாலை நிலத்தில் எயினர் குடியிருப்பு, காஞ்சி மாநகரத்தில் பற்பல சமயத்தாரும் கொண்டாடும் விழாக்கள் பற்றி கூறுகிறது.
- Ø பாணாறு எனவும் அழைக்கப்படுகின்றது.
மலைபடுகடாம்
- Ø இதன் ஆசிரியர் பெருங்கௌசிகனார்.
- Ø 583 அடிகளைக் கொண்டது.
- Ø பாட்டுடைத்தலைவன் நன்னன் சேய் நன்னன்.
- Ø ஆற்றுப்படை நூல்களுள் இதுவே பெரியது.
- Ø நன்னன் நாட்டிற்கு செல்லும் வழி, வழியில் கிட்டும் உணவு, சோலை அழகு, மலைவளம், நாட்டின் சிறப்பு, நன்னனின் முன்னோர் பெருமை போன்றவை கூறப்பட்டுள்ளன. கூத்தராற்றுப்படை எனவும் வழங்கப்படுகின்றது.
- Ø இதன் ஆசிரியர் கபிலர்.
- Ø 261 அடிகளைக் கொண்டது.
- Ø ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அகப்பொருள் மரபை அறிவுறுத்த கபிலர் இந்நூலை இயற்றினார் என்பர்.
- Ø அறத்தோடு நிற்றல் துறையில் இயற்றப்பட்டுள்ளது. 99 வகையான மலர்களை இந்நூலில் கபிலர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைப்பாட்டு
- Ø இந்நூலின் ஆசிரியர் நப்பூதனார்.
- Ø 103 அடிகளைக் கொண்டது.
- Ø பாட்டுடைத்தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன்.
- Ø பத்துப்பாட்டுள் அளவில் சிறிய நூல் இதுவே.
- Ø இந்நூல் நெஞ்சாற்றுப்படை என்றும் அழைக்கப்படுகின்றது.
- Ø இதன் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். 301 அடிகளைக் கொண்டது.
- Ø பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகாலன்.
- Ø இந்நூலுக்கு வஞ்சிநெடும்பாட்டு என்ற பெயர் உண்டு.
- Ø இந்நூலில் 163 அடிகள் வஞ்சிப்பாவல் அமைந்துள்ளன.
நெடுநல்வாடை
- Ø இதன் ஆசிரியர் நக்கீரர்.
- Ø 188 அடிகளைக் கொண்டது.
- Ø பாட்டுடைத்தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன்.
- Ø வாடைக்காற்று தலைவனைப் பிரிந்த தலைவிக்கு நெடு வாடையாகவும், போரில் வெற்றி பெற்றதால் தலைவனுக்கு அவ்வாடைக்காற்று நல்வாடையாகவும் அமைக்கப்பெற்று பாடப்பட்டுள்ளது.
மதுரைக்காஞ்சி
- Ø இதன் ஆசிரியர் மாங்குடி மருதனார்.
- Ø 782 அடிகள் கொண்டது.
- Ø பாட்டுடைத்தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன்.
- Ø காஞ்சித்திணையின் நிலையாமை பற்றிப் பேசுகின்றது. மதுரையில் நடைபெற்ற ஆறு விழாக்களான திருபரங்குன்ற விழா, மதுரைக்கோவில் விழா, அந்திவிழா, எழுநாள் விழா, திருவோண விழா, மன்னன் பிறந்த நாள் விழா ஆகியவற்றை விவரிக்கின்றது.
No comments:
Post a Comment