Tuesday, 29 August 2023

29.08.2023

                                      BODHI IAS ACADEMY

Daily Current Affairs- நடப்பு நிகழ்வுகள்- 29.08.2023

Important Days and Dates – 29th August 2023

சர்வதேச அணு ஆயுத சோதனைகளுக்கு எதிரான தினம் (International Day against Nuclear Tests) – Aug 29

தேசிய விளையாட்டு தினம் (National Sports Day) – Aug 29

கருபொருள்“Sports are an enabler to an inclusive and fit society”

தெலுங்கு மொழி நாள் (Telugu Language Day) – Aug 29


Sports Current Affairs

மேகஸ் வெர்ஸ்டாபென்

·        டட்ச் கிராண்ட் ப்ரீ F1 கார் பந்தயத்தில் நெதர்லாந்தின் ரெட்புல் டிரைவரான மேகஸ் வெர்ஸ்டாபென் சாம்பியன் வென்றுள்ளார்

·        இதுவரை 9 பந்தயங்களில் வெற்றி பெற்று செபாஸ்டியன் வெட்டலின் சாதனை சமன் செய்துள்ளார்

 

பிரணாய்

·        இந்தியாவின் பிரணாய் டென்மார்க்கில் நடைபெற்ற உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

·        உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 7வது இந்திய வீரராக திகழ்கிறார்

 

National Current Affairs

அறிதிறன்பேசி (Smart Phone) உற்பத்தி

·        அறிதிறன்பேசி (Smart Phone) உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

 

சுக்ரயான் 1 விண்கலம்

·        வெள்ளி கோளை பற்றி ஆராய்ச்சியை மேற்கொள்ள சுக்ரயான் 1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது.


சந்திரயான்


·        2008-ல் சந்திரயான் 1 விண்கலத்தை நிலவில் நீர் இருப்பதை ஆய்வு செய்ய அனுப்பியது

·        22.07.2019-ல் சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது

·        14.07.2023-ல்சந்திரயான் 3 விண்கலத்தைநிலவின் தென்துருவத்தை ஆராய செய்ய அனுப்பியது

 

 

·        சூரியனைப் பற்றி ஆராய்ச்சியை மேற்கொள்ள ஆதித்யா-எல் 1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது.

·        செவ்வாய் கோளை பற்றிய ஆராய்ச்சிக்காக மங்கள்யான் 2 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது.

·        மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.

 

 

 

ஜி20

 

·        ஜி20 கூட்டமைப்பின் அதிகாரபூர்வ வணிக ஆலோசனை அமைப்பான பி20யின் உச்சி மாநாடானது தில்லியில் நடைபெற்றது.

Tamilnadu Current Affairs

.

தேசிய பொருளாதரம்

·        தேசிய பொருளாதரத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பெற்றுள்ளதாக தமிழ்நாடு மனித வள மேலாண்மைத்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

 

Wednesday, 19 July 2023

மயக்கமா? கலக்கமா?

 மயக்கமா? கலக்கமா?

குறள் 611
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
இந்த குறளின் பொருள்
ஒரு செயலை செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் அச்செயலின் நம்பிக்கையும் குன்றாமல் எப்பேர்ப்பட்ட இடர்கள் வந்தாலும் தளர்வடையாமால் சோம்பல்கொள்ளாமல் அச்செயலை செய்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்து கொண்டு இருந்தால் நம்முடைய முயற்சிக்கான பலனாக வெற்றி கிட்டும்.
இந்த குறளுக்கு உதாரணமாக கவிஞர் வாலி அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவத்தை கூறுகிறேன்..
வாலி பாடல் எழுத வந்த தொடக்க காலங்களில் திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு அதிகம் கிடைக்கவில்லை. அப்போது கவிஞர் வாலியும் நடிகர் நாகேசும் கிளப் கவுசில் தங்கியிருந்தனர்.
திரைப்பட பாடல் எழுதும் வாய்ப்பு எப்போதாவது வந்ததால் நிரந்தர வருமானம் இன்றி அவதிப்பட்டார் வாலி.
ஆதலால் திரைப்படப் பாடல் எழுதும் பணியை விட்டுவிட்டு மதுரையில் உள்ள டி.வி.எஸ் நிறுவனத்துக்கு கணக்கு எழுதும் பணிக்குச் செல்லலாம். அப்பணியில் மாதச்சம்பளம், சாப்பாடு உண்டு. நிரந்தர வருமானம் வரும் என்று முடிவு செய்து மதுரைக்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார்.
அந்நேரம் வாலியைச் சந்திக்க பாடகர் திரு.பி.பி.சீனிவாஸ் வந்தார். பணம் இன்றி கஷ்டப்படும் காலங்களில் வாலிக்கு பணம் கொடுத்து உதவுவார் பாடகர் பி.பி.சீனிவாஸ்.
பாடகரை வரவேற்ற கவிஞர் பேசிக் கொண்டிருக்கையில் “சமீபத்தில் என்ன பாடலை பாடினீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு பி.பி.சீனிவாஸ் அவர்கள் சுமைதாங்கி என்ற படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் என்று சொல்லி அதைப் பாடிக் காண்பித்தார்.

மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதியை நாடு
என்று முழுப்பாடலையும் சீனிவாஸ் அவர்கள் பாடிக் காண்பித்ததும் மதுரை செல்லும் பயணத்தை நிறுத்தி விட்டார் வாலி.
தோல்வியைக் கண்டு துவளக் கூடாது என்பதற்கு கவிஞர் வாலியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் நமக்கு எல்லாம் நல்ல பாடமாக அமையும்.

Monday, 17 July 2023

ஒருவர் நல்லவரா கெட்டவரா ,தகுதியானவரா, நேர்மையானவரா, யோக்கியரா, அறமும் ஒழுக்கமும் பேணுபவரா , அல்லது அயோக்கியரா என்பது எப்படித் தெரியும்?

 "


ஒருவர் நல்லவரா கெட்டவரா  ,தகுதியானவரா, நேர்மையானவரா, யோக்கியரா, அறமும் ஒழுக்கமும் பேணுபவரா , அல்லது   அயோக்கியரா என்பது எப்படித் தெரியும்? அவரது எச்சத்தால் காணப்படும் என்கிறார் திருவள்ளுவர்.  எச்சம் என்றால் என்ன ??? 


பறவைகள் கழிக்கும் மலத்தை எச்சம் என்போம். மானுடனின் எச்சம் என்பது அதுவல்ல. வாழ்ந்து மறைந்தபின்பு விட்டுச்செல்லும் பெருமைகள் அல்லது சிறுமைகள். அவர்களின் வாரிசுகள் என்று கூறலாம்."

அவர்களின் வாரிசுகள் எந்த தன்மை வாய்ந்து இருக்கிறதோ அதுவே ஒருவரின் எச்சம் ஆகும் ..



தக்கார் தகவிலர் என்பது அவரவர்


எச்சத்தால் காணப் படும்’ 


இந்த திருக்குறளுக்கு உதாரணம் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களின்   வாழ்வில்  ஒரு உண்மைச் சம்பவத்தை இன்று தற்செயலாக படித்தேன் ..


 அப்துல் கலாமின் வார்த்தைகளில் ,

அவரது இளமைக்கால வாழ்க்கை :


"நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்...


என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம்...


சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன் , என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய் ..... ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்....


‘ இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனது ’ என்று என் தந்தை என்னிடம் கேட்டார்.

நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரியவில்லை ..


என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என் தாய்...

ஆனால் அதற்கு என் தந்தையோ .."எனக்கு கருகிய ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும் " என்று பதில் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது ....


சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்... நான் மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு , அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன் :

" அப்பா ... உங்களுக்கு உண்மையாகவே கருகிய ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?"


சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை , என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சொன்னார்....

" மகனே...உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு , நமக்கும் பணிவிடை செய்கிறார் ..

களைத்துப் போய் இருப்பார் ...

ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ...

ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்...

நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...

இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ....

நடப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான மனநிலைக்கு நாம் மாறுவதே ....”


குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அய்யா அவர்களின் தந்தை ஜைனுலாப்தீன் விட்டு சென்ற எச்சம் தான் நாடு போற்றும் ஏவுகணை நாயகனை இந்தியாவிற்கு தந்தந்து ...


நன்றி ...அடுத்த பதிவில் சந்திப்போம் 

Tuesday, 11 July 2023

திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர்

 

·           இயற்பெயர்   = ஆளுடையபிள்ளை

·           பெற்றோர்   = சிவபாத இருதயார்பகவதி அம்மையார்

·           ஊர் = சீர்காழி(தோணிபுரம்பிரம்மபுரம்வேணுபுரம்)

·           மார்க்கம் = கிரியை என்னும் சத்புத்திர மார்க்கம்

·           நெறி = மகன்மை நெறி

·           ஆட்கொள்ளட்பாட இடம்       = சீர்காழி

·           இறைவனடி சேர்ந்த இடம்      = பெருமணநல்லூர்

·           இவரின் தமிழ் = கொஞ்சு தமிழ்

·           மனைவி = சொக்கியார்

·           வாழ்ந்த காலம் = 16 ஆண்டுகள்

 

படைப்புகள்:

·           முதல் மூன்று திருமுறைகள் =”திருகடைகாப்பு” எனப் போற்றுவர்

·           1,2,3 ஆம் திருமுறைகள்

 

வேறு பெயர்கள்:

·           ஆளுடையபிள்ளை(இயற்பெயர்)

·           காழிநாடுடைய பிள்ளை

·           ஆணைநமதென்ற பெருமான்

·           பரசமயகோளரி

·           திராவிட சிசு(ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தர்யலகரி என்னும் நூலில்)

·           நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தம் (சுந்தரர்)

·           இன்தமிழ் ஏசுநாதர்

·           சத்புத்திரன்

·           காழி வள்ளல்

 

அற்புதங்கள்:

·           மதுரை = தான் தங்கியிருந்தமடத்திற்குக் கூன்பாண்டியன் வைத்த நெருப்பை அவனுக்கே வெப்பு நோயாகப்பற்றச் செய்தார். அவன் மனைவி மங்கையர்க்கரசியும்அமைச்சர் குலச்சிறையாரும் வேண்டநீறு பூசி அவனின் வெப்பு நோய் நீக்கிஅவனின் கூன் நீக்கச் செய்து அவனைநின்றசீர்நெடுமாறன்ஆகினார்.

 

·           திருமறைக்காடு = மூடிய கோயில் கதவுகளைபாடித் திறக்க செய்தார்.

·           திருப்பாச்சிலாச்சிரமம் = மழவன் மகளின் முயலகன் நோய் நீக்கினார்

·           திருமருகல் = பாம்பு தீண்டியவணிகனின் விடம் நீக்கினார்

·           திருவோத்தூர் = ஆண்பனையைபெண்பனைஆக்கினார்


  • மூன்று
    வயதில் இவருக்கு உமையம்மையே நேரில் வந்து இவருக்கு ஞானப்பால்ஊட்டினார். அன்று முதல் இவர்ஞானசம்பந்தன்எனப் பெயர் பெற்றார்.

 

  • மதுரையில் அனல்வாதம்புனல்வாதம் செய்து சமணர்களை தோற்கடித்தார். தோல்வி தாங்காமல் 8000 சமணமுனிவர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர்.

 

 

  • இவரின் தோழர் = பரஞ்சோதியார்
  • ஞானசம்பந்தர் 16000 பதிகம் பாடியதாகநம்பியாண்டார் நம்பி குறிப்பிடுகிறார். ஆனால் நமக்கு கிடைத்தது 384 பதிகங்கள் மட்டுமே.

 

  • கிடைக்கும் மொத்தப்பாடல்கள் 4181

 

  • சம்பந்தரும் நாவுக்கரசரும் சந்தித்த இடம் = திருப்புகலூர்

 

  • சேக்கிழார் பெரியபுராணத்தில் ஏறக்குறைய பாதிக்கு பாதி சம்பந்தர் வரலாறு இடம் பெறுவதால்பிள்ளை பாதி புராணம் பாதிஎனப்போற்றப்படுகிறது.

 

மேற்கோள்:

 

·            காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதனாம நமச்சிவாயமே

 

  

மனித இரத்தம்

  மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் .  இரத்தத்தின்  பகுதிப்  பொருள்கள்  இரத்தம்  ...