Tuesday, 16 April 2024

இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் -உற்பத்தி -(7 ஆம் வகுப்பு) (Part-2)

 இந்தியப் பொருளாதாரம்  -உற்பத்தி  -(7 ஆம் வகுப்பு)

உற்பத்தியின் வகைகள் 

1. முதன்மை நிலை உற்பத்தி 

இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை, நேரடியாகப் பயன்படுத்திச் செய்கின்ற செயல்பாடுகளுக்குட்பட்ட நிலையை முதன்மை நிலை உற்பத்தி என்கிறோம். முதன்மைநிலையில் வேளாண்மைக்கு முதலிடம் அளிக்கப்படுவதால், இதனை வேளாண்மைத் துறை உற்பத்தி எனவும் கூறுவர்.

வேளாண்மை , காடுவளர்ப்பு, மீன் பிடித்தல், சுரங்கத் தொழில் மற்றும் எண்ணெய் வளங்களைப் பிரித்தெடுத்தல் போன்றவை முதன்மை நிலை உற்பத்திக்கு உதாரணங்களாகும்.. 

2. இரண்டாம் நிலை உற்பத்தி

முதன்மை நிலையிலிருந்து கிடைக்கின்ற பொருள்களை மூலப்பொருள்களாகப் பயன்படுத்திப் புதிய உற்பத்திப் பொருள்களாக உருவாக்கும் செயல்பாட்டை இரண்டாம் நிலை உற்பத்தி என்கிறோம். இரண்டாம் நிலையில் தொழிற்சாலைக்கு முக்கியத்துவம்  அளிக்கப்படுவதால், இதனைத் தொழில் துறை உற்பத்தி எனவும் கூறுவர். நான்கு சக்கர வாகனங்கள் , ஆயத்த ஆடைகள், இரசாயனப் பொருள்கள் போன்றவை இரண்டாம் நிலை உற்பத்திக்கு  உதாரனங்களாகும்.

3. மூன்றாம் நிலை உற்பத்தி

சமூகத்தில் ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோர் ஆற்றும் சேவைகள் மூன்றாம் நிலை உற்பத்தி எனலாம். இவைகள் கண்களுக்கு புலப்படாதவை . வங்கி, காப்பீடு, கல்வி, மற்றும் பாதுகாப்பு ஆகியவைகள் சேவைத் துறைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பெரும்பங்கு வகிப்பவை மூன்றாம் நிலை அல்லது சேவைத் துறை உற்பத்திகளே.

உற்பத்திக்கான காரணிகள்

உற்பத்திக் காரணிகளை உற்பத்தியின் உள்ளீடுகள் என அழைக்கலாம். அவைகள் வெளியீடு அல்லது உற்பத்திப் பொருள்களாக மாற்றப்படுகின்றன. 

உற்பத்திக் காரணிகள் இரண்டு முக்கிய பிரிவுகளாக உள்ளன. அவை , 1. முதன்மை உற்பத்திக் காரணிகள் 2. பெறப்பட்ட உற்பத்திக் காரணிகள் அல்லது இரண்டாம் நிலை உற்பத்திக் காரணிகள் அல்லது நவீன உற்பத்திக் காரணிகள்

மூலதனம் 

மூலதனம் என்பது முதலீடு என்றும், தொழிலமைப்பு என்பது உற்பத்தியில் நிலம், உழைப்பு மற்றும் மூலதனத்தை ஒருங்கிணைப்பதாகும். தொழில் அமைப்பு என்பது தொழில் முனைவோர் என்றும் அழைக்கப்படுகிறது.

நிலம்: 

'நிலம்' என்ற உற்பத்திக் காரணி, இயற்கை வளங்கள் அனைத்தையும் அல்லது இயற்கை மனிதனுக்கு இலவசமாகக் கொடுத்திருக்கும் கொடை அனைத்தையும் குறிப்பதாகும். 

2. உழைப்பு (Labour)

உற்பத்திப் பாதையில் உழைப்பு என்பது மனித இடுபபொருள் ஆகும். “ஒரு பணியை ஒருவர் செய்வதால், அவருக்குக் கிடைக்கும் மனநிறை மட்டுமின்றி அதனை செய்வதற்காக கைமாறு எதிர்பார்த்து மனிதன் தன் உடல் அல்லது அறிவை முழுமையாகவோ பகுதியாகவோ பயன்படுத்தி, மேற்கொள்ளும் கடும் முயற்சியே உழைப்பாகும்” என ஆல்பிரட் மார்ஷல் உழைப்பை வரையறுத்துள்ளார்.

வேலை பகுப்பு முறை

ஆடம்ஸ்மித் பொருளியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவரது கோட்பாடு, செல்வத்தை அடிப்படையாகக் கொண்ட 'செல்வ இலக்கணம் ஆகும்.' நன்னெறி கருத்துக் உணர்வுக் கொள்கை," நாடுகளின் செல்வமும், அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு" (1776) என்பன, அவரின் சிறந்த இரு படைப்பு நூல்கள்.

வேலை பகுப்பு முறையை, ஆடம்ஸ்மித், தனது "நாடுகளின் செல்வமும்" அவற்றை உருவாக்கும் காரணிகளும், ஓர் ஆய்வு என்ற நூலின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். 

3. மூலதனம் (Capital)

மூலதனம் என்பது பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்வதற்காக மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும். எளிமையாகக் கூறினால், மூலதனம் என்பது பணத்தைக்  குறிக்கும். செல்வத்தை உற்பத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட செல்வம் என்றும் மூலதனத்தைக் கூறலாம். மார்ஷலின் கருத்துப்படி, "இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்கக் கூடிய பிற வகைச் செல்வங்களே மூலதனம் ஆகும்."

4. தொழில் முனைவோர் (அல்லது) தொழிலமைப்பு (Entrepreneur or Organisation)

தொழில் முனைவோர், எனப்படுபவர் பல உற்பத்திக் காரணிகளை (நிலம், உழைப்பு, மூலதம்) ஒருங்கிணைத்துச் செயல்படுபவர் ஆவார். அக்காரணிகளைச் சரியான அளவிலும், முறையிலும் தொடங்கி, இடர்ப்பாடுகளை ஏற்று, உற்பத்தி அதிகரிக்க முயல்பவரே தொழில் முனைவோர் ஆவார்.

தொழில் முனைவோர், 'தொழில் அமைப்பாளர்' எனவும் அழைக்கப்படுகிறார். தற்காலத்தில், தொழில் முனைவோர், "சமுதாய மாற்றம் காணும் முகவர்" என அழைக்கப்படுகிறார். இவர் சமுதாய விருப்பமுள்ள உற்பத்தியைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாய நலம் மேம்படவும் காரணமாகிறார்.



No comments:

Post a Comment

மனித இரத்தம்

  மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் .  இரத்தத்தின்  பகுதிப்  பொருள்கள்  இரத்தம்  ...