ஒருநாள் சோழ மன்னனுக்கு வினோதமான ஒரு சிந்தனை தோன்றி, உடனே தன் அரண்மனைப்புலவர்கள் அனைவரையும் அழைத்து, நாளை காலைக்குள் நான்கு கோடி பாடல்கள் எழுதி வரவேண்டும் என ஆணையிட்டார்.
4 பாடல்கள் எழுதவே 4வாரமாகிவிடுகிறது. இதில் எங்கே 4கோடிப் பாடல்கள் எழுதுவது என்று புலவர்கள் எல்லாம் சிந்தைகலங்கி நின்றபோது, அங்கே வந்த அவ்வையார் 'என்ன வருத்தம்?என்று கேட்க, அவர்கள் அரசனின் உத்தரவைச் சொல்ல, அவ்வையார் இளமுருவலுடன் இவ்வளவுதானா, நான் எழுதித்தருகிறேன் 4 கோடி பாடல்கள் கொண்டுபோய் உங்கள் மன்னனிடம் கொடுங்கள்' என்றுகூறி, நான்கு பாடல்கள் மட்டும் அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளன. , புலவர்கள் தயங்கிநிற்க, அவ்வையார் 'ஒவ்வொரு பாடலும் 1கோடி பொன் மதிப்புடையது சென்று கொடுங்கள்' என்று சொல்லி அனுப்பினார்.
புலவர்கள் அவையில் இந்த கோடிப்பாடல்களை வாசிக்க, மன்னன் வியந்து, இவற்றை நிச்சயம் அவ்வையார்தான் இயற்றியிருக்க முடியும் எனப்புலவர்களைப் பார்க்க, புலவர்கள் அனைவரும் ஆமாம்.. அவ்வையார் இயற்றியதுதான் எனக்கூற, மன்னன் மனமகிழ்ந்து அவ்வையை அழைத்து, பெரும் பரிசு அளித்து, பெரும் மரியாதை செய்து போற்றினார்.
4 கோடி மதிப்பு உடைய பாடல் என்ன?என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்....

No comments:
Post a Comment